பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை

சென்னை, பிப். 6- பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டு தண்ட னையை 10 ஆண்டுகளாக அதிகரித்து தமிழக சட்டப்பேரவையில் 5.2.2021 அன்று சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண் முகம், சட்டத்திருத்த மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்ப தாவது: தமிழக சட்டப்பேரவை விதி 110ன் கீழ் 2020 செப்டம்பர் மாதம் முதல் வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் தண்டனையை அதிகரிக்கும் பொருட்டு இந்திய தண்டனை தொகுப்பு சட்டத்தின் 304பி, 354பி, 354டி, 372, 373 ஆகிய பிரிவுகளில் உள்ளடக்கிய குற்றத்திற்கான தண்ட னையில் திருத்தம் செய்வதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டு தண்ட னையை 10 ஆண்டுகளாக நீட்டிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது.

3 மற்றும் 7 ஆண்டுகள் தண்டனை 5 மற்றும் 10 ஆண்டுகள் என மாற்றி அமைக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் தண்டனை 7 ஆண்டுகள் என்றும், 10 ஆண்டுகளுக்கு என்ற தண்டனை 7 ஆண்டுகளுக்கு குறையாத வகையில், ஆயுள் வரையில் நீட்டிக்கும் சிறை தண் டனையாக மாற்றி அமைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி, தவ றான குற்ற நோக்கத்துடன் பெண்களை பின்தொடர்ந்தால், இரண்டாம் முறை யும், தொடர்ந்தும் குற்றமிழைத்தால் தற்போது வழங்கப்படும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையை, அதிகபட்சமாக 7 ஆண்டுகளாகவும், பிரிவு 372இல் பாலி யல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட் டோரை விற்பனை செய்தல் மற்றும் பிரிவு 373இல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்டோரை  விலைக்கு வாங்கினால், தற்போது வழங் கப்படும் அதிகபட்சமான 10 ஆண்டு களுக்கு பதிலாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை யும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங்க புதிய சட்டத்தில்வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Comments