இணையதளம் மூலம் தானாக பட்டா மாறுதல் திட்டம்: 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது

சென்னை,பிப்.11- இணையதளம் மூலம் தானாக பட்டா மாறுதல் திட்டம் விழுப்புரம், வேலூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது

தமிழக அரசு கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டார் 2.0 மென்பொருள் திட்டத்தை கொண்டுவந்தது. அதில் அசையா சொத்து குறித்த உரிமை மாற்றம் செய்யப்படும் ஆவணப்பதிவுகளின் போது சர்வே எண் உட்பிரிவு செய்ய தேவை எழாத சொத்துக்கள் ஆவணப்பதிவு முடிந்தவுடன் சார்பதிவாளர் கணினிவழி ஒப்புதல் வழங்கிடுவதை முற்றிலும் இணையவழியாக பட்டா மாற்றம் மேற்கொள்ளப்படுவதை நடைமுறைப்படுத்திட அரசு ஒப்புதல் வழங்கி ஆணையிட்டது. சோதனை அடிப்படையில் செங்கல்பட்டு வருவாய் மாவட் டத்தில் உள்ள சார்பதிவகங்களில் நடைமுறைப்படுத்தப் பட்டது. இதைத்தொடர்ந்து, 10 மாவட்டங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பதிவுத்துறை தலைவர் அனைத்து மாவட்ட சார்பதிவாளர்களுக்கு  அனுப்பிய சுற்றறிக்கை:  அசையாச் சொத்து பொருத்த ஆவணம் எழுதிக் கொடுத்த நபரின் பெயரும், ஏற்கெனவே வழங்கப்பட்ட இணையவழி பட்டாவில் கண்டுள்ள நில உரிமையாளர் பெயரினையும் ஒப்பீடு செய்து இரண்டும் ஒன்றாக இருக்கும் நிகழ்விலேயே தானாக பட்டா மாறுதல் குறித்த ஒப்புதல் குறியீடு சார்பதிவாளரால் வழங்கப்பட வேண்டும்.  இணையவழி சிட்டாவில் கண்ட பட்டாதாரர் இறந்த வாரிசுதாரர்களால் ஆவணம் எழுதிக் கொடுக்கப்பட்ட நிலையிலும் கூட்டுப்பட்டாவில் பட்டாதாரர் பெயரும் ஆவணத்தில் கண்ட விற்பனை செய்பவரின் பெயரும் ஒன்றாக இல்லாமல் மாறுபட்ட நிலையில் தானாக பட்டா மாறுதலுக்கு சார்பதிவாளரால் ஒப்புதல் வழங்குவது தவறானது.

செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தை தொடர்ந்து தானாக பட்டா மாறுதல் நடைமுறை பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருப்பூர், தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு (8.2.2021) முதல் விரிவுபடுத்தப்படுகிறது. உரிய கவனமின்றி அரசின் திட்டத்திற்கு குந்தகமாக சார்பதிவாளர்கள் செயல்படுவது பதிவுத்துறை தலைவரின் கவனத்திற்கு தெரியவந்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குரல் வழி தகவல் பரிமாற்றம் சேவை அதிகரிப்பு

சென்னை, பிப்.11 தகவல் பரிமாற்ற சேவையை அலெக்சா (Alexa) என்ற பெயரில் இந்தியாவில் தொடங்கி, தற்போது மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதாக, அமேசான் இந்தியா (Amazon India) நிறுவனம் அறிவித்துள்ளது. ஒலி வடிவிலான தகவல் பரிமாற்ற சேவை வழங்கும் பலவற்றுள், விரும்பத்தக்க ஒன்றாக சிறப்பானதொரு இடத்தை மூன்று ஆண்டுகளிலேயே அலெக்சா பெற்று சாதனை படைத்துள்ளது.

இது குறித்துப் பேசிய அமேசான் இந்தியா நிறுவனத்தின் அலெக்சா பிரிவுக்கான தலைவர்  புனீஷ்குமார்நமது வீடுகளின் வசிப்பறையில் உள்ள உயர் அதிர்வெண் ஒலி பரப்பிகளானாலும், அதிநவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன் அல்லது நூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ள அலெக்சா  பொருட்களானாலும். எல்லாமே இன்றைய இணைய உலாவிகளின் விருப்பத் தேர்வாக உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர், முதியவர் என பலதரப்பட்ட நுகர்வோர் தங்களது அன்றாட வாழ்வின் பல தேவைகளுக்கு, அலெக்சா வழங்கும் ஏதேனும் ஒரு சேவையை இன்று பயன்படுத்துகிறார்கள்எனத் தெரிவித்தார்.

Comments