பன்னாட்டளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10.48 கோடியாக உயர்வு: 22.76 லட்சம் பேர் உயிரிழப்பு

நியூயார்க்,பிப்.4- உலகம் முழுவதும் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 கோடியே 48 லட்சத்தைக் கடந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7 கோடியே 66 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றுக்கு தற்போது 2 கோடியே 58 லட்சத்து 46 ஆயிரத்து 528 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரி ழந்துள்ளனர்

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு நாள் அதிகபட்ச அளவாக 31 ஆயிரத்து 596 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

Comments