கோவை பெரியார் புத்தக நிலையத்தில் ஒரேநாளில் 10,000 ரூபாய்க்கு மேல் கழக வெளியீடுகள் விற்பனை

திராவிடம் வெல்லும் பகுத்தறிவு புத்தகம் பரப்பும் பணி. கோவை பெரியார் புத்தக நிலையம், மாவட்ட திராவிடர் கழக அலுவலகம், ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் வளாகத்தில் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. படிப்பகத்திற்கு 11.2.2021இல் வருகை தந்த திமுக தோழர் திராவிடமணி அவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய மற்றும் திராவிட இயக்க கருத்துகள் அடங்கிய புத்தகங்களை தேடித் தேடி ஆர்வத்துடன் 10,000 ரூபாய் மதிப்புள்ள 150க்கு மேற்பட்ட புத்தகங்களை 10விழுக்காடு தள்ளுபடியில் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார். அவரிடம் மயக்க பிஸ்கெட்டுகள்-ஓர் எச்சரிக்கை புத்தகத்தை படிப்பக பொறுப்பாளர் .மு.ராஜா  வழங்கினார்.

Comments