குரூப் 1 சான்றிதழ் பதிவேற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

சென்னை, பிப். 16- குரூப் 1 பதவிகளுக் கான சான்றிதழ் சரிபார்ப்புக்கும் மற்றும் முதன்மை எழுத்துத் தேர் வுக்காகத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்க ளைத் தேர்வாணைய இணையதளத் தில் பதிவேற்றுவது குறித்து டிஎன் பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சான்றிதழ் பதி வேற்றம் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் 15.2.2021 அன்று வெளியிட்ட செய்தி: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை எழுத்துத் தேர் வுக்காகத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை  ஸ்கேன்' செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நடத் தும் அரசு -சேவை மய்யங்கள் மூலமாக பிப்.16 செவ்வாய்க்கிழமை முதல் மார்ச் 15-ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு முன்னதாக பதிவேற் றம் செய்ய வேண்டும். விண்ணப்ப தாரர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை ஒரு முறை பதிவேற்றத்தில்  இணைத்தால் மட்டுமே அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய முடியும்.

அதேபோன்று முதன்மை எழுத் துத் தேர்வுக்குத் தேர்வுக்கட்டண விலக்குக் கோராத விண்ணப்பதாரர் கள் அனைவரும் ரூ.200 கட்ட ணத்தை மார்ச் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறினால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக் கப்படும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் மார்ச் 15-ஆம் தேதிக்குள் சான்றிதழைப் பதிவேற்றம் செய்யவில்லை என்றா லும் அவர்களின் விண்ணப்பம் பரி சீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அதில் தெரிவித்து உள்ளார்.

Comments