திருச்சி ‘வீகேயென்’ கண்ணப்பன் சிலை : தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் திறப்பு

சிவகங்கை, ஜன. 7- சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கத்தில் பிறந்தவர் தொழிலதிபர்வீகேயென்கண்ணப்பன் அவர்கள். தஞ்சை வல்லத்தில் அமைந்திருக்கும் பெரியார் - மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக இருந்து சிறப்பு செய்தவர். அவர் சில ஆண்டுகளுக்கு முன் மறைவுற்றார். அவரது புகழுக்கு பெருமைச் சேர்த்திடும் வகையிலும், நினைவை போற்றும் வகையிலும் இன்று (7.1.2021) காலை 10 மணியளவில் அவரது சொந்த ஊரான கண்டரமாணிக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையினை திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் திமுக மாவட்டக் கழக செயலாளர். மேனாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் கல்லல் மேற்கு ஒன்றியச் செயலாளர் குன்னக்குடி சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர தி.மு.. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Comments