ஏட்டுத் திக்குகளிலிருந்து

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     .பி. மற்றும் உத்தர்காண்ட் மாநில பாஜக அரசுகள் இயற்றிய மதம் மாறி திருமணம் செய்வதை தடை செய்யும் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. இரு மா நில அரசுகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

·     வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், தில்லி அருகே போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை வருகிற சனவரி 11ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

·     வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் இன்று நடத்திட முடிவு செய்துள்ளனர்.

·     ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சி ஹிந்துக்களை கிறிஸ்துவர்களாக மதமாற்றம் செய்ய முனைகிறது என்ற குற்றச்சாட்டை தெலுகு தேசக்கட்சி கூறியுள்ளது. ஹிந்துத்துவா அரசியலை பாஜக ஆந்திராவில் முன்னெடுப்பதனால், தெலுகு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் இதேபோன்று அரசியல் செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

·     பொள்ளாச்சியில் 2019 பிப்ரவரியில் நடைபெற்ற பெண்கள் பாலியல் வழக்கில் தற்போது சிபிஅய், அதிமுக பிரமுகரைக் கைது செய்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தூண்டுதலின்பேரில் அவரது ஆதரவாளர்கள், தலைநகர் வாஷிங்கடனில் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். பின்னர் டிரம்ப் வேண்டுகோளின்படி கலைந்து சென்றனர்.

·       தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2019 மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க திருமதி மீனாட்சி லெகி (புதுடில்லி) எம்பி, தலைமையிலான இரு அவைகளின் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, தற்போது அக்குழு 89 திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா ஆபத் தானது என அதனை வடிவமைத்த குழுவின் தலைவரான நீதிபதி பி.என். சிறீகிருஷ்ணா தெரிவித்திருந்தார்.

தி டெலிகிராப்:

·     உத்தரபிரதேசத்தில் அங்கன்வாடியில் பணியில் உள்ள பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவத்தில் சாமியார் சத்ய நாராயண் தலைமறைவாகியுள்ளார். அவருடன் இருந்த கூட்டாளிகள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

- குடந்தை கருணா

7.1.2021

Comments