சிம்ஸ் மருத்துவமனையில், கோவிஷீல்ட் தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் தொடங்கி வைத்தார்

 


சென்னை, ஜன. 20- இந்தியா முழுவதும் தொடங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவமான - கோவிஷீல்ட் (சிஷீஸ்வீsலீவீமீறீபீ) தடுப்பூசி போடும் பணியில் சென்னையில் உள்ள முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனை (ஷிமிவிஷி பிஷீsஜீவீtணீறீ) நேற்று (19.1.2021) பங்கேற்றது.

நாட்டின் மிகப் பெரிய சுகாதார தற்காப்பு நடவடிக் கையான இதை மருத்துவரும், தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளருமான மருத்துவர் ஜெ ராதாகிருஷ் ணன் அய்..எஸ். தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங் கேற்ற எஸ்.ஆர்.எம். மருத்து வமனைகளின் தலைவர் ரவி பச்சமுத்து பேசுகையில், “கோவிட் 19 பெருந்தொற் றுக்கு எதிரான நமது போரின் ஒருபகுதியாக, தற்போது இந் தியாவில் நடைபெற்று வரும் மிகப் பெரிய தடுப்பூசி முகா மான கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கும் பணியில் சிம்ஸ் மருத்துவமனையும் பங்கேற்கி றது என்பதை நினைத்து பெருமையாக உணர்கிறேன். சாமானிய மக்கள் ஏராளமா னவர் தங்கள் இயல்பு வாழ்க் கைக்கு திரும்பவும், தங்களது வாழ்வாதாரப் பணிகளில் துணிச்சலாக ஈடுபடவும் நம்பிக்கையளிக்கும் விதமாக தமிழக மற்றும் மைய அரசு எடுத்து வரும் இந்த முக்கியப் பணியில் நாங்களும் பங்கேற்க வாய்ப்பளித்தற்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்எனத் தெரிவித்தார்.

Comments