ராகுல்காந்தி எச்சரிக்கை
புதுடில்லி,ஜன.30- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று (29.1.2021) டில்லியில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
மத்தியஅரசு,
விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை அழித்துவிட்டது. அதனால்தான் விவ சாயிகள் வெகுண்டு எழுந்தனர். மத்திய அரசு, விவசாயிகளை அடிக்கிறது, மிரட்டுகிறது, அவ மானப்படுத்த பார்க்கிறது.
விவசாயிகளுக்கு செய்ததெல்லாம் குற்றச்செயல்கள் ஆகும்.
தேசிய
புலனாய்வு முகமையை பயன்படுத்தி, விவசாயிகளை அச்சுறுத்த முயற்சிக்கிறது. இவற்றை கைவிட்டு, விவசாயிகளுடன் பேசி, தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
அப்படி
தீர்வு ஏற்படுத்தாவிட்டால், விவசா யிகள் போராட்டம் மற்ற மாநிலங்களுக்கும் பரவும். இது, விவசாயிகளுடன் நிற்காமல், தொழி லாளர்கள், நகர்ப்புறங்கள், குடிசைப்பகுதிகள் என பரவும். விவசாயிகள்,
வீட்டுக்கு சென்று விடுவார்கள்என்று மத்திய அரசு நினைக் கக் கூடாது. அவர்கள் வீட்டுக்கு செல்ல மாட்டார்கள்.
வேளாண்சட்டங்களை
ரத்து செய்து, அவற்றை குப்பை கூடையில் போடுவதுதான் ஒரே தீர்வு.
இவ்வாறு
அவர் கூறினார்.
டில்லி
செங்கோட்டையில் விவசாயிகள் கொடி ஏற்றியது பற்றி கேட்டதற்கு ‘‘அவர்களை அங்கு செல்ல விட்டது யார்? அவர்களை தடுத்து நிறுத்துவது உள்துறை அமைச்சகத்தின் வேலை தானே?’’ என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.
ராகுல்காந்தி
தனது ‘சுட்டுரை’ பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளையும்,
தொழிலாளர்களையும் தாக்குவதன் மூலம் பிரதமர் மோடி, நாட்டை பலவீனப்படுத்துகிறார். இது, தேசவிரோத சக்திகளுக்குத்தான் பலன் அளிக்கும்.
இவ்வாறு
அவர் கூறியுள்ளார்.