இதற்குக் கூடவா?
அமைச்சர்கள்
போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு
அனுமதி அளித்தவுடன், கரோனா தடுப்பூசியை நான் போட்டுக் கொள்வேன்: - விஜயபாஸ்கர், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.
இதற்குக்
கூட பா.ஜ.க.
மேலிடம்தான் உத்தரவு கொடுக்க வேண்டுமா?
சவால்தான்!
வேளாண்
சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் நாளை பேச்சுவார்த்தை: - உச்சநீதிமன்றம் நியமித்த குழு தகவல்.
போராட்டத்தில்
ஈடுபட்டுள்ள விவசாயிகளை எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்கச் செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று குறிப்பிட்டு விட்டார்களே, அக்குழுவினர்!
எந்தெந்த
மீன்கள்
சிக்கும்?
குட்கா
வழக்கில் முன்னாள் அமைச்சர் உள்பட 30 பேர்மீது குற்றப்பத்திரிகை.
எந்தெந்த
மீன்கள் சிக்கும் என்பதை நாடே எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.
இது‘சுவர் எழுத்து!'
சென்னை
- புது வண்ணையில் சுவர் விளம்பரம் செய்வதில் அ.தி.மு.க. - பா.ஜ.க.
மோதல்!
அ.தி.மு.க.
- பா.ஜ.க. கூட்டணி
அமைத்தாலும், தொண்டர்களுக்கிடையே கூட்டுப் பணி நடக்கப் போவதில்லை - இது ‘சுவர் எழுத்து!'