கழகத் தலைவர் ஆசிரியர் பிறந்த நாளில் குருதிக் கொடை வழங்கல்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம் சார்பில் தந்தை பெரியார் 47ஆவது நினைவுநாள், தமிழர் தலைவர் ஆசிரியர் 88ஆம் ஆண்டு பிறந்தநாள் மனிதநேய நாளில் குருதி கொடை முகாம் சந்தியா மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநிலத்தின் செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். பின்னர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட தலைவர் ரகு நாகநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் சுருளி ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தா தேவி, திண்டுக்கல் மண்டல செயலர் கருப்புசட்டை நடராசன் மற்றும் மாவட்ட செயலாளர் மணிகண்டன், அல்லிநகரம் வெங்கடேசன் மாணவர் கழக பெரியார் மணி, நகர தலைவர் பெரியார் லெனின், நகர செயலர் கண்ணன், மாநில மாணவர் கழகத் துணை செயலர் ஸ்டார் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக சார்பில் நகர செயலர் மாவீ செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் பாண்டியன்  மற்றும் அனைத்து கட்சி சார்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முகாமில் வர்த்தகர்கள் சங்கம், அரிமா சங்கம் இந்தியன் ஸ்டேட் வங்கி - கனரா வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments