செய்தியும், சிந்தனையும்....!

யாருக்கான சீர்திருத்தம்?

இந்தியாவில் அதிகப்படியான ஜனநாயகம் இருப்பதால், சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக இருக்கிறது: - நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அலுவலர்

திட்டக்குழுவை ஒழித்து நிதி ஆயோக்கை பிரதமர் மோடி உருவாக்கினார் - இந்தப் புதிய கார்ப்பரேட் அமைப்புக் கூறும் சீர்திருத்தம் யாருக்கானது என்பதுதான் முக்கியம்.

உடனிருந்தே கொல்லும் வியாதிகள்!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேற்கு வங்காளத்தில் மேலும் ஓர் அமைச்சர் பதவி விலகல்.

உடனிருந்தே கொல்லும் வியாதிகள் விலகுவதும் நல்லதே!

பாரத் மாதா கீ ஜெய்!'

இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு 3 புள்ளி 59 லட்சம், 2018 ஆம் ஆண்டு 3 புள்ளி 78 லட்சம் பெண்களுக்கு எதிரான வழக்குகள் பதிவு;

2019 இல் வன்புணர்வுகள் 32,033 நாள் ஒன்றுக்கு 88 பெண்கள்: - தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கணக்கெடுப்பு.

பாரத புண்ணிய பூமிபாரத் மாதா கீ ஜெய்!' என்று கோஷம் போடுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. பக்தி வழிந்தோடும் ஆன்மிகப் பூமி என்று கித்தாப்பு வேறு!

வெட்கக் கேடு!

கோஷம் ஒன்று போதாதா?

2014, 2019 இரு மக்களவைத் தேர்தல்களிலும் பா... சார்பில் ஒரே ஒரு முஸ்லிம்கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அதனால் என்ன?

சப்கா சாத் சப்கா விகாஸ்!' என்ற (அனைவரோடும் இணைந்த வளர்ச்சி) பிரதமரின் கோஷம் போதாதா?

செத்தும் உயிர் வாழ்வோர்?

இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக் கோரும் தி.மு.. கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்: - உயர்நீதிமன்றம் உத்தரவு.

எது எதற்கெல்லாம் நீதிமன்றம் செல்லவேண்டியுள்ளது பார்த்தீர்களா? செத்தும் உயிர் வாழ்கின்றவர்களைத் தேர்தல் நேரத்தில்தான் பார்க்க முடியும்.

சரியான தீர்ப்பு!

மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.

சரியான தீர்ப்பு - சமூகநீதி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே திட்டவட்டமாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. சில நேரங்களில் தேவையில்லாமல் நீதிமன்றங்கள் குறுக்குச்சால் ஓட்டுவதால், இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுக்கும் துணிவை சிலருக்கு ஏற்படுத்தி வருகிறது.

இட ஒதுக்கீடு விவாதத்துக்கு அப்பாற்பட்டது (Not Negotiable) என்று

இரவு 12 மணிவரை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி முடிவு செய்யப்பட்டது என்பது தெரியுமா?

Comments