இளைய சமூகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் ஓர் என்சைக்ளோப்பீடியா

                                                                                     அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.

மீனம்பாக்கம் விமான நிலையம் வரும்போதெல்லாம் தங்களை காணுகிற வாய்ப்பு கிட்டியது. பணி ஓய்வுக்கு பிறகு அவ்வாறு அமையவில்லை. இருப்பினும் நண்பர் டி. சவரியப்பன் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அமையும் போதெல்லாம் இயக்கம் சார்ந்த அறிவுப் பூர்வமான சங்கதிகள் பேசிக் கொள்வோம். கரோனா காலத்திலும் தங்களுடைய அயரா உழைப்பை கண்டு நான் பிரமிப்பு அடைகிறேன். இன்றுள்ள இளைய சமூகத்திற்கு தங்கள் பணி ஓர் என்சைக்ளோப்பீடியாவாக 88ஆவது வயதிலும் திகழ்வதை எண்ணி ஆனந்தம் அடைவதின் மகிழ்வாக ரூ.10,000/-த்தை நன்கொடையாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு வழங்குகிறேன் என்று தனது மனமகிழ்ச்சியை தெரிவித்து உணர்வுப் பூர்வமாக கடிதம் எழுதி நன்கொடையை

எம்.ஜி. செபஸ்டீன் அனுப்பியுள்ளார். நன்றி.

Comments