உலகின் மிகவும் ஆபத்தான துருவப் பகுதிகளைக் கடந்த பெண் விமானிகள்

பெங்களூர், ஜன.12 ஏர் இந்தியா விமானிகள் மகளிர் குழு உலகின் மிக நீளமான விமானப் பாதையில் வட துருவத்தின் மீது பறந்து சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருவில் உள்ள கெம் பேகவுடா பன்னாட்டு விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கினர். இந்த விமானப் பயணம் சுமார் 16,000 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கியது.

"இப்படிப்பட்ட ஒரு பயணம் இதற்கு முன்னர் மேற்கொள் ளப்படாததால், இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இந்த பயணத்தை முடிக்க சுமார் 17 மணிநேரம் ஆனது" என்று சான் பிரான்சிஸ்கோ-பெங்களூரு இடையிலான ஏர் இந்தியாவின் முதல் விமானத்தை இயக்கிய நான்கு விமானிகளில் ஒருவரான சிவானி மன்ஹாஸ் .என்.அய்.யிடம் தெரிவித்தார்.

"இன்று 11.1.2021 வட துருவத் தின் மீது பறந்து சாதனை படைத் தது மட்டுமல்லாமல், அனைத்து மகளிர் விமானிகள் குழுவாக இருந்து இந்த சாதனையை வெற்றி கரமாக செய்துள்ளது பெருமை அளிக்கின்றது. இந்த சாதனையில் பங்கு வகிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடை கிறோம், பெருமிதம் கொள்கி றோம். இந்த பாதையில் பயணம் மேற்கொண்டதால் சுமார் 10 டன் எரிபொருளை மிச்சப்படுத்த முடிந்தது'' என்று கேப்டன் ஜோயா அகர்வால் பெங்களூரு  விமான நிலையத்தில் ஊடகவி யலாளர்களிடம் கூறினார்.

ஏர் இந்தியாவின் அனைத்து மகளிர் விமானிகள் குழு சான் ஃபிரான்சிகோவிலிருந்து அமெரிக்க நேரப்படி  9ஆம் தேதி தங்களது பயணத்தை  தொடங்கி ஜனவரி 11 ஆம் தேதி பெங்களூர் வந்துசேர்ந்தனர் இந்த பயணம் சுமார் 16,000 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது.

வட துருவத்தின்  மீது பறப்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவால் நிறைந்தது என்றும், இதற்கு அதிக திறனும் அனுபவ மும் தேவை என்றும் விமான வல்லுநர்கள் நம்புகின்றனர். இந்த விமானத்திற்கு தலைமை வகித்த கேப்டன் சோயாவுக்கு 8,000 க்கும் மேற்பட்ட பறக்கும் மணி நேர அனுபவம் உள்ளது.

2013 ஆம் ஆண்டில் போயிங் -777 விமானத்தை ஓட்டிய இள வயது பெண் விமானி என்ற சாதனையை அவர் செய்தார். வட துருவம் வழியாக அவர் மேற்கொண்ட இந்த பயணம் அவரது சாதனைகளில் மற் றொரு மைல்கல்லாக இருக்கும்.

"2013 ஆம் ஆண்டில் போயிங் -777 விமானத்தை ஓட்டிய இள வயது பெண் விமானி என்ற பெருமை எனக்கு கிடைத்தது. பெண்கள் சமூக அழுத்தத்தை எதிர்கொண்டாலும் அவர்க ளுக்கு தன்னம்பிக்கை இருக்க வேண்டும். எந்தவொரு பணி யையும் சாத்தியமற்றது என்று அவர்கள் கருதக் கூடாது'' என்று அவர் கூறியிருந்தார்.

Comments