திருக்குறள் மாநாடு நடத்தியவர் பெரியார்

பல்கலைக் கழகத்தில் திருக்குறளுக்கு தனி இருக்கை : துணைவேந்தர் தகவல்

சென்னை,ஜன.16- தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் திருக்குறளுக்கென தனியாக ஒரு இருக்கை தொடங்கப்படும் என்று  அப் பல்கலைக் கழக துணைவேந்தர் தெரிவித்தார்

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் தமிழியல் பண்பாட்டுப் புலமும் ஆஸ்தி ரேலியாவில் உள்ள சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நேற்று திருவள் ளுவர் விழாவை கொண்டாடி யது. இந்த நிகழ்ச்சியில் 12 நாடுகளை சேர்ந்த ஆய்வா ளர்கள், ஆசிரியர்கள், ஆர்வ லர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட அறிஞர்கள் பங் கேற்றனர்.  இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பார்த்தசாரதி பேசியதாவது:  திருக்குறள் தலை சிறந்த வாழ் வியல் நூல். கல்வி மேலாண்மை, வேளாண்மை, தத்துவம், உள வியல் என்று அனைத்து துறை யினருக்கும் பொருந்துகின்ற வகையில் நுட்பமான கருத் துகளை வள்ளுவர் அதில் தெரிவித்துள்ளார்.

கடந்த 1812ஆம் ஆண்டு முதன்முதலில் தஞ்சை ஞானப் பிரகாசரால் திருக்குறள் அச்சேறியது. ஜி.யு. போப் தான் முதன் முதலில் திருக்குறளை தமிழில் இருந்து மொழி பெயர்த்தார். அதற்கு பிறகு 80க்கும் மேற்பட்ட மொழி களில் அந்த நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு கருத்துக் கருவூலம். திருக்குறளின் அறக்கருத்துகள் அனைவரையும் சென்று சேரும் வகையில், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் திருக்குறளுக்கென்று தனியாக ஒரு இருக்கை தொடங்கப்படும். அதன் மூலம் தமிழறிஞர்கள் பங்கேற் புடன் திருக்குறள் தொடர் பான ஆய்வுகள் மேற்கொள் ளப்படும்.

திருக்குறள் மாநாடு நடத்தி திருக்குறள் எளிய மக்களிடமும் சென்றடைய வேண்டும் என்று தொண்டாற்றியவர் தந்தை பெரியார் என்பது நினைவு கொள்ளத்தக்கது.

Comments