"ஒப்பற்ற தலைமை", "வாழ்வியல் சிந்தனைகள்", "ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்" - நூல்கள் ஆய்வுரை

கோவி.செழியன்

தி.மு.. சட்டமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர்

ஆசிரியர் வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழா, நூல்கள் அறிமுக விழா 3.1.2021 அன்று மாலை 6 மணியளவில் குடந்தை பெரியார் மாளி கையில் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் கோவி.செழியனின் நூல்கள் ஆய்வுரை பின்வருமாறு:

இன இழிவு ஒழிப்பு:

பெரியார் எனும் வைரத்திற்கு பட்டை தீட்டும் பாங்கு, தலைவனை உயர்த்திப் பிடிக்கும் தொண்ட னின் துடிப்பு, பெரியாருடன் நெருங்கி பழகிய காலம் 40 ஆண்டுகளுக்கு மேலாக, 10 வயது சிறுவனாக அறிமுகம். வீரமணி பேசிய பிறகு நான் பேச வேண்டுமா? என்ற பெரியாரே 30 ஆண்டுகளுக்கு பிறகு "இன இழிவு ஒழிப்பு" மாநாட்டிலே அறிவிக் கின்ற அளவிற்கு உயர்ந்த நிலைக்கு சென்ற தமிழர் தலைவர்" "ஒப்பற்ற தலைமை" என்ற தலைப்பில் பேசுவது பொருத்தத்திலும் பொருத்தமானது.

65 ஆண்டுகளுக்கு முன்பு 1955 ஆம்ஆண்டு தோழன் என்னும் பத்திரிகையில் தமிழர் தலைவர் "தலைவரென்போர் யாரெனக் கேட்டால்" எனும் கட்டுரை விழித்திருப்பது பிரெஞ்சு எழுத்தாளர் "ஆந்தூரு மராய்" என்பவர் எழுதிய "வாழ்க்கைக் கலை" (The Arts of Living) எனும் நூலின் ஒன்பது அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ள தலைமைப் பண்புக்கான இலக்கணத்தை வாசித்து அந்த இலக்கணத்திலும் வாழும் இலக்கியமாய் பெரியார் திகழ்வதை பொருத்திக் காட்டி எழுதியிருப்பது, காலத்தால் அழியாத எழிலோவியம்.

தந்தை பெரியார் - நீதிக்கட்சி தலைவர்:

நீதிக்கட்சி வரலாறு-டாக்டர் நடேசனார் சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் சுப்புராய ரெட்டியர், 1921இல் பனகல் அரசர் ராமராய நிங்கராயர் முதலமைச்சராக பொறுப்பேற்றதை விளக்குகிறார். நீதிக்கட்சி ஆட்சி செய்த 17 ஆண்டுகளில் நீண்டகாலம் 1921-1926 முதலமைச்சர் பெருமைக்குரியவர் பனகல் அரசர் என்ற தகவல்களை தருகிறார். பனகல் அரசர் கொண்டு வந்த இந்து அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம்-பெரியார் வரவேற்ற வரலாறு. - குண்டுமணி அளவிற்குக் கூட நேர்மை தவறியதில்லை. காங்கிரஸ் - பார்ப்பனர் அமைப்பு என்ற பிம்பத்தை மாற்ற பெரியார் ஆயுதமாக தேவைப்பட்டார். ஒப்பற்ற தலைமை பெரியாரின் துணிச்சலை, எதிர் நீச்சலை, எதிரிகளை எதிர்கொண்ட தீரத்தை போரில் ஏந்திய ஆயுதத்தை நிரல்பட தொகுத்துள்ளார்கள்.

சிறந்த கல்வியாளர்,ஆய்வாளர் டாக்டர். வா.செ.குழந்தைசாமி எழுதிய கவிதை,

"நீரெல்லாம் அவன் வியர்வை தமிழகத்தின்

நிலமெல்லாம் அவன் நடந்த தாரை,வாழும்

ஊரெல்லாம் அவன் மூச்சுக்காற்று நம்மோர்

உயர்வெல்லாம் அவன் தந்த பிச்சையன்றோ"

பெரியாரின் புகழ் பாடியது, இலக்கிய மணத்துக்கு சான்று கவிதை.

எதிர்ப்பிலே வளர்ந்த .வெ.ரா:

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு முதல் பாகம் எழுதியவர் சாமி சிதம்பரனார், எழுதிய மற் றொரு படைப்பு 1952ஆம் ஆண்டு வெளிவந்த பல ரும் அறிந்திராத அருமையான புத்தகத்தை ஆசிரியர் தம் உரையில் வெளிப்படுத்தினார்கள். எதிர்ப்பிலே வளர்ந்த .வெ.ரா. பக்கங்களின் எண்ணிக்கை 40 என்றுரைத்த ஆசிரியர் இப்புத்தகத்தை "கேப்சூல் என வர்ணித்தார். தந்தை பெரியார் தாம் தொடங்கிய அச்சகத்திற்கு வைத்த பெயர் "உண்மை விளக்க அச்சகம். தாம் தொடங்கிய இதழுக்கு வைத்த பெயர் உண்மை. அதுதான் அதிக நாள் நீடிக்கும் இயக்கத்தின் வெற்றி உறுதி.

தந்தை பெரியாரின் கடைசி கூட்டம் 1973 டிசம்பர் 19. தியாகராயர் நகரில் உரை நிகழ்த்தும் போதே அன்று இரவே சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதையும், கோமா நிலைக்கு சென்றதையும் 24ஆம் தேதி அய்யாவின் உயிர் பிரிந்ததையும், அரு கில் இருந்தவர் கவலையோடு கடமையாற்றியவர். தோழர்களின் நெஞ்சில் பதிந்த ஓவியம்.

தலைவர் கலைஞர் - கைரிக்ஷாவில் நாடகம்:

புதுச்சேரி கலவரம் 20.07.1945இல் வரலாற்று நிகழ்வு. 75 ஆண்டுகளுக்கு முன்னால் பங்கு பெற்ற சம்பவம். கவாலியன் தியேட்டர்- சீர்திருத்த நாடகம் - வசன கர்த்தா தலைவர் கலைஞர் - கைரிக்ஷாவில் ஏறுவதற்கு நடந்து வரும் புரட்சிக் கவிஞர்.

பெண்கள் பாதுகாப்பு, காவல்துறை செயல்பாடு, 28.07.1945இல்குடிஅரசு' இதழ் செய்திகளையும் ஆதரமாக இணைக்கிறார். மதுரையில் கருப்புச் சட்டை மாநாடு - 1946ஆம்  ஆண்டு மே மாதம் பந்த லுக்கு தீ வைத்து கொளுத்தியதை தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்குகிறார்.

அண்ணா எழுதிய "மரண சாசனம்":

திராவிட நாடு ஏட்டில் அண்ணா எழுதிய "மரண சாசனம்" தலையங்கத்தை குறிப்பிட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று புகழ்ந்தார். 1946 மதுரை கலவரம்,1944 கடலூரில் செருப்பு வீசப்பட்டது. 1924இல் வைக்கம் போராட்டம். 61 வயதில் பெல்லரி சிறையில் பெரியாருக்கு 10 முறை எக்ஸ்ரே பரி சோதனை. எடை 184 பவுண்டிலிருந்து 171 ஆக குறை கிறது. தம் உரையில் நம் நெஞ்சம் பதை பதைக்கிறது என்று பதறுகிறார் ஆசிரியர். 19.01.1922இல் காந்தியார் கூறிய பதிலையும் இந்து பத்திரிக்கையில் வெளிவந் ததையும் அக்கறையோடு தெரிவிக்கிறார். அய்யா வின் சொத்துக்களையும் தம்முடைய சொத்துக்களை யும் அறக்கட்டளையாக்கி பெரியாரின் கணக்கு வெல் லும் வண்ணம் மக்களுக்கே வழங்கிய மாட்சியை காணாமல் குத்தூசி குருசாமி 1965 ஆம் ஆண்டு மறைந்தார் எனும் செய்தி. ஜே.எஸ்.கண்ணப்பர், எஸ்.இராமநாதன், கி..பெ.விசுவநாதன், சவுந்தர பாண்டியன், பொன்னம்பலனார், குத்தூசி குருசாமி, வழக்குரைஞர் வேதாச்சலம் போன்றவர்கள் தந்தை பெரியாருக்கு செய்த துரோகங்களை உணர்ச்சிப் பூர்வமாய் உரையின் நிறைவில் கூறியது பெருந் தன்மைக்கு சான்றாகும். நினைக்குந்தோறும் இனிக் கும் அருட்பெரும் குணமாகும்.

நமக்கு பாடங்கள்:

துரோகத்தை எதிர்கொள்வது பெரியார் வாழ்க்கை யின் ஒரு பகுதி, வென்றது எப்படி, இயக்கத்தை வலு வுள்ளதாக மாற்றியது எப்படி, தத்துவங்கள் நமக்கு பாடங்கள்: எல்லாவற்றையும் நேர்மறை சிந்தனை யுடன் (Positive Thoughts) பார்க்ககூடிய தமிழர் தலைவர் இதனையும் நோய் தடுப்புச் சக்தி ஆற்றல் என வர்ணித்தார்.

(தொடரும்)

Comments