புரட்சிக்
கவிஞர் பாரதிதாசன்
பொங்கல்
நாள் வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர்
எழுக வாழ்க!
இங்
கெனைத் தனிவி டுத்தே
ஏகினார்
வருவா ரன்றோ?
அங்கையிற்
பெட்டி தூக்கி
ஆளிடம்
மூட்டை தந்து
பெங்களூர்த்
தெருக்க டந்து
பெரு
வண்டி நிலையம் சேர்வார்!
தைவிழா
வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர்
தளிர்க்க! வாழ்க!
மெய்
இங்கே உயிர் அங் கென்றே
சென்றவர்
மீள்வார் அன்றோ?
‘உய்'
என்று சீழ்க்கை காட்ட
உட்கார்ந்த
படிஎன் அன்பர்
தையலை
எண்ண, மெல்லத்
தவழ்ந்திடும்
புகைத்தல் வண்டி!
தமிழர்
நாள் வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர்
தழைக! வாழ்க!
அமிழ்
தூறத்தழுவுந் தோளார்
அகன்றனர்
வருவா ரன்றோ?
சுமை
'எரிமலை' ஒன் றங்குத்
தொடர்மலை
இழுத்த தென்ன
இமைப்பிற்பக்
கத்தூரில் வண்டி
இச்சிச் சென்றோடி நிற்கும்!
தைப்
பொங்கல் வருக! கீழ்ப்பால்
தனிக்
கதிர் எழுக! வாழ்க!
ஒப்பிலா
அன்பர் என்றன்
உயிர்காக்
கவருவா ரன்றோ?
இப்
பக்கம்வரும்அவ் வண்டி
எதிர்ப்பக்கம்
ஓடும் காடு
உட்பக்கம்
பார்த்தால் வண்டி
ஓடும்!
ஓடாது காடு!
உழவர்
நாள் வருக; கீழ்ப்பால்
ஒளிச்செல்வன்
எழுக! வாழ்க!
வழங்காமல்
சென்றார் இன்பம்
வழங்கிட
வருவா ரன்றோ?
முழங்கியே
நிற்கும் வண்டி
முறுக்
கோமப் பொடி ஆரஞ்சிப்
பழம்விற்பார்
-- செய்தித்தாள்தான்
பசிதீர்க்கும்
அத்தா னுக்கே!
பாற்பொங்கல்
வருக! கீழ்ப்பால்
பகலவன்
எழுக! வாழ்க!
வேற்றாள்
போல் சென்றார் அன்பு
விளக்காக
வருவா ரன்றோ?
நேற்றேறி
இருப்பார்! இவ்வூர்
நிலையத்தை
அடைவார் இன்று
நூற்றைந்து
கூலியாட்கள்
நுழைவார்கள்
கூலி என்றே!
பெரும்பொங்கல்
வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர்
பிறக்க! வாழ்க!
இரும்பு
நெஞ்சத்தார் சென்றார்
இன்புறவருவா
ரன்றோ!
திரும்பிய
பக்க மெல்லாம்
தெரிந்தவர்
காண்பார்! அத்தான்
பதிந்துகட்
டணச்சீட் டீந்து
பின்புற
முகப்பில் நிற்பார்.
திருவிழா
வருக! கீழ்ப்பால்
செங்கதிர்
எழுக! வாழ்க!
உருமழைத்
துறைவார் என்றன்
உளம்பூக்க
வருவார் அன்றோ?
தெருவெல்லாம்
வண்டி நிற்கும்
நல்லதாய்த்
தெரிந்து சத்தம்
ஒரு
ரூபாய் பேசி, மூட்டை
யுடன்ஏறி
அமர்வார் அத்தான்!
பொன்விழா
வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர்
எழுக! வாழ்க!
அன்பிலார்
போற் பிரிந்தார்
ஆர்வத்தால்
வருவா ரன்றோ?
முன்னோக்கி
வா என்பார் வண்
டிக்காரர்!
முன்நகர் ந்தால்
பின்னோக்கிக்
குதிரை போகும்
பிழை
செய்தார் நெஞ்சம் போலே!
இனிக்கும்நாள்
வருக! கீழப்பால்
இளங்கதிர்
எழுக! வாழ்க!
தனியாக்கிச்
சென்றார் உள்ளம்
தவிர்
த்திட வருவார் அன்றோ?
புனையப்
பொங்கற் புத்தாடை
வாங்கிடப்
போவார் அன்பில்
நனையத்தான்
வேண்டும் என்பேன்
நன்மாலை
வந்ததாலே!