மேல்பட்டாம்பாக்கம் - பி.என்.பாளையத்தில் கழக அமைப்புக்கூட்டம் ஏராளமான இளைஞர்கள் இயக்கத்தில் இணைந்தனர்!

மேல்பட்டாம்பாக்கம், ஜன. 19- - கடலூர் மாவட்டம், அண்ணா கிராமம் ஒன்றியம் மேல் பட்டாம்பாக்கம் - பி.என்.பாளையத்தில் திராவிடர் கழக அமைப்புக் கூட்டம் 10.1.2021 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை மேல்பட்டாம்பாக்கம் டேனிஷ் மிஷன் பள்ளி வளாகத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 50க்கும் மேற் பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

அண்ணா கிராமம் ஒன்றிய கழக தலைவர் இரா.தமிழன்பன் வரவேற்புரையாற்றினார். மண்டல செயலாளர் நா.தாமோதரன், மாவட்ட செயலாளர் தென்.சிவக் குமார், மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மண்டல மாணவர் கழக செயலாளர் .பண்பாளன், ஒன்றிய கழக செயலாளர் .கனக சபாபதி, ஒன்றிய அமைப்பாளர் இரு.இராசேந்திரன், வடலூர் கழக தலைவர் புலவர் சு.ராவணன் ஆகி யோர் கருத்துரை ஆற்றினர். கூட் டத்துக்கான ஏற்பாட்டை தோழர் .ரமேஷ் செய்திருந்தார். கூட்டத் தில் கலந்து கொண்ட அனைவ ருக்கும் இயக்க நூல்களையும், கைத் தறி ஆடையினையும் .பண்பாளன் வழங்கினார்.

கிளைக்கழக தலைவராக .ரமேஷ், துணைத் தலைவராக .ரஞ்சித், செயலாளராக .ரஞ்சித்குமார், துணைச் செயலாளராக கி.பிரேம்சந்தர், அமைப்பாளராக .பெருமாள் ஆகியோர் உறுதி மொழி ஏற்றபின் - பெரியார் படத் துக்கும், அம்பேத்கர் சிலைக்கும் மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் தொண்டும், கழக லட்சியக் கொள்கைகளும், தமிழர் தலைவர் செயல்பாடுகளும், அம்பேத்கரின் அரிய சாதனைகள், ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, பகுத்தறிவு, சமத்துவம், சமதர்மம், பெண்ணு ரிமை பற்றிய செய்திகளும் தொகுத் துரைக்கப்பட்டன. முடிவில் இரு. இராசேந்திரன் நன்றி கூறினார்.


Comments