உரத்தநாட்டில் "மயக்க பிஸ்கெட்டு"கள் ஓர் எச்சரிக்கை - புத்தகம் விநியோகம்

உரத்தநாடு, ஜன. 12- தேசியம் காக்க, தமிழினம் காக்க புறப்படு வோரே பதில் சொல்லுங்கள் "மயக்க பிஸ்கெட்டு"கள் ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகம் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளை ஞரணி சார்பில் 17.12.2020 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் வணிகர்கள், விவசாயிகள், பொது மக்கள், இளைஞர்கள், மாணவர்களிடம் வழங்கப்பட்டது

மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் தலைமை வகித்தார்.

தஞ்சை மாவட்ட செயலாளர் .அருணகிரி நிகழ்வை தொடங்கிவைத்தார்.

ஒன்றியத் தலைவர் .ஜெகநாதன், நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், நகர செயலாளர் ரெ. ரஞ்சித்குமார், நகர இளைஞரணி செயலாளர் பேபி ரெ.ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அண்ணா.மாதவன் ஆகியோர் முன்னிலை யேற்றனர்.

மாநில இளைஞரணி  துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர் .லெட்சுமணன், மாநில மாணவர் கழக அமைப்பா ளர் இரா.செந்தூரபாண்டியன் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன், ஒன்றிய துணைத்தலைவர் இரா.துரைராசு,

பெரியார்நகர் .உத்திராபதி, பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாத்துரை, ஒன்றிய பக தலைவர் கு. நேரு , கண்ணை கிழக்கு கிளைக்கழகத் தலைவர் இரா.செந்தில்குமார் , தஞ்சை மாநகர மாணவர் கழக அமைப்பாளர் ரா. கபிலன். ரோகித் உள்ளிட்ட கழகத்தோழர்கள் பங்கேற்றனர்

புத்தக விநியோகம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

Comments