மகளின் திருமணத்தையொட்டி அதிரடி அன்பழகன் - நர்மதா இணையர் நன்கொடை

கழக மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன் - முனைவர் .நர்மதா ஆகியோரின் மகள் ..இளமதி - செல்வன் இரா.வீரமணி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் காணொலி மூலமாக 24.1.2021 அன்று நடத்தி வைக்கிறார். அதற்கான  அழைப்பிதழை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். அதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.5000/- வழங்கப்பட்டது. உடன்: மோகனா வீரமணி, தாம்பரம் மாவட்டத் தலைவர் .முத்தையன், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன். (12-01-2021)

Comments