கழகப் பொதுச் செயலாளர் தலைமையேற்று நடத்தி வைத்தார்
கரூர்,
ஜன. 28- பெரியார் திடல் பணித் தோழர் சு.விமல்ராஜ் - க.தீபா வாழ்க்கை இணையேற்பு விழாவை தலைமையேற்று கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்.
பெரியார்
திடல் பணித் தோழரும், கரூர் மாவட்டம், கொமட்டேரி பி. சுப்பிரமணியன் -விஜயா ஆகியோரின் மகனுமாகிய சு.விமல்ராஜுவுக்கும், கரூர் மாவட்டம்,
குரும்பபட்டி வீ.கருப்பசாமி -- தமிழரசி
ஆகியோரின் மகள் க.தீபா ஆகியோரின்
வாழ்க்கை இணையேற்பு விழாவை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ்
27.1.2021 அன்று காலை 10 மணி யளவில் தரகம்பட்டியில் மணமக்க ளுக்கு உறுதிமொழி கூறி மணவிழா வினை நடத்தி வைத்தார்.
மணமகனின்
நண்பர் க.கலைமணி வரவேற்று
உரையாற்றினார். திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்து கடிதமும், கழகத்தின் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்க ளின் வாழ்த்து கடிதமும் வாசிக்கப் பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
மணமக்களை
வாழ்த்தி கரூர் மாவட்டத் தலைவர் ப.குமாரசாமி, கரூர்
மாவட்டச் செயலாளர் ம.காளி முத்து, பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மேனாள் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், கட
வூர் ஒன்றிய
பெருந்தலைவர் நா.செல் வராஜ்,
வீரியபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் க.ராமசாமி, சேங்கல்
காவேரி மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளர் பி. முருகேசன், மணமகனு டன் ஆசிரியர் பயிற்சி பயின்ற மேனாள் மாணவர்கள் தருமபுரி மா.தேவேந்திரன், புதுக்கோட்டை
மு.கண்ணதாசன், கரூர் பத்மபிரியா பிரகாஷ், மற்றும்
பொறுப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினர். வை.கலை யரசன்
இணைப்புரையாற்றினார்.
இறுதியாக மணமகள் க.தீபா நன்றி
யுரையாற்றினார்.
நிகழ்வில்
கரூர் மாவட்ட கலை, இலக்கிய அணி தலைவர் மா.இராம சாமி,
கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பொம்மன், பொதுக்குழு உறுப்பினர், வைரவன், மாவட்ட துணைச் செயலாளர் வே. ராஜி, மாவட்ட இளைஞரணிச் செய லாளர் ம.ஜெகநாதன், நகர
கழகச் செயலாளர் ம.சதாசிவம், கடவூர்
ஒன்றிய கழகச் செயலாளர் இரா.கார்த்திக், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் பெருமாள், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் இராஜா, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் இராஜாமணி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அம்பிகா, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கவுதம், திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கிராஜ், திரா
விட மகளிர் பாசறை மாநில அமைப் பாளர் சே.மெ.மதிவதனி,
திராவிட மாணவர் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் யாழ்.திலீபன், வட சென்னை மாவட்டச்
செயலாளர் தி.செ.கணேசன்,
கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன்,
திருச்சி வி.சி.வில்வம்,
பெரியார் புத்தக விற்பனை நிலைய பணி தோழர்கள் சுமதி, பூங்குழலி, ரேணுகா, மீனாகுமாரி, ரீனா, பவானி, சந்தியா, பெரியார்
ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாணவர்கள் தமிழகம் முழுவதுமிருந்து திரளாக வந்து இருந்தனர்.
கழக
பொதுச் செயலாளர் உரை
தொடர்ந்து
உரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர், தொடக்கத்தி லேயே மணமக்கள் பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார்.
அவரது
உரை வருமாறு: "தன் பிள்ளை களின் எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய வகையில் அவர்களின் விருப் பப்படியே இந்த திருமணம் சுயமரி யாதைத் திருமணமாக நடைபெறுவ தற்கு காரணமாக இருந்தவர்கள்.
சுயமரியாதைத்
திருமணத்தில் மணமக்களை பாருங்கள் எப்படி மகிழ்ச்சியாக அமர்ந்து இருக்கிறார் கள். மற்ற திருமணங்களையும் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் சுள்ளிகள் புகைந்து கொண்டிருக்கும். மணமகன் ஒருபுறம் கண்ணை கசக்கி கொண்டு இருப்பார்; மணமகள் ஒருபுறம் கண்ணை கசக்கிக் கொண்டு இருப் பார் ஆனால் இந்த திருமணம் அப் படியில்லை, தமிழில் புரியும்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டு சடங்குகளற்ற பகுத்தறிவு முறையான திருமணமாகும். இது ஒரு மாபெரும் பண்பாட்டுப் புரட்சியாகும்.
எளிமையான
திருமண முறை
இந்த
பகுதியில் இருக்கக்கூடிய தாய்மார்களுக்கு புதியதாக இருக் கலாம். பல பேர் இதுபோன்ற
திரு மணங்களை பார்த்தும் கூட இருக் கலாம். சுயமரியாதை திருமணம் என் பது மிகவும் எளிமையான திருமண முறையாகும். ஆடம்பரம் இல்லாமல், பெரிய தொகையையெல்லாம் செல விட்டு செய்வது அல்ல; ஏன்
சொல் லுகிறோம் என்றால் சிறுக சிறுக சேர்த்த பணத்தை ஆடம்பரம் என்ற பெயரில் தேவையில்லாத காரியங்க ளுக்கு வீணாக்குவதை தவிர்த்துவிட்டு, தன்னுடைய பிள்ளைகள் பெயரில் வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்கி வைத்தால்
அவர்களுக்கு பின்னாளில் பெரிய உதவியாக இருக்கும். விவாஹ சுப முகூர்த்தம், பாணிக்கிரஹனம், கன்னிகாதானம், தாராமுகூர்த்தம் என்ற ஆரியப் பார்ப்பனரால் அறிமுகம் செய்யப் பட்டுப் புழக்கத்தில் இருந்த திருமணங் கள் பற்றிய சொற்கள் மதிப்பிழந்து போக, பெண்ணடிமை
ஒழிக்கும் தமிழ்மொழி தற்போது ஆட்சி செலுத்துகின்றது.
சுயமரியாதைத்
திருமணம் என்பதாகத் தந்தை பெரியாரால் அறிமுகம் செய்யப்பட்ட தன்மான முறை வாழ்க்கை ஒப்பந்தவிழா இன் றைக்கு மிகமிக இயல்பான - சட்டப்படி செல்லுபடியாகும் மணவினையாக நிலையூன்றப்பட்டு விட்டது.
மணமகன்
கொள்கை குடும்பத்து பிள்ளை
மணமகன்
விமல்ராஜ் எங்கள் கொள்கை குடும்பத்து பிள்ளை. திருச்சியில் எங்கள் நிறுவனத்தில் (2007-2009) படித்த காலம் முதலே நன்கு அறிமுகமானவர். பிறகு
2010ஆம் ஆண்டு முதல் சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் புத்தக நிலையத்தில் பணியாற்றிய எங்கள் வீட்டு பிள்ளை ஆவார். எங்க ளது கொள்கைப் பிரச்சாரத்தில் இரண்டு வழிமுறைகள் முக்கியமா னது. ஒன்று பேச்சின் மூலம் கொள் கையை பரப்புதல், மற்றொன்று புத்த கத்தின் மூலம் மக்களை விழிப்புணர்வு அடைய செய்வது; அந்த மாபெரும் பிரச்சார பணியில் தன்னை அர்ப் பணித்துக்கொண்டு பல ஆண்டுகளாக சென்னைப்
பெரியார் திடலில் பணி என்பதைவிட சிறப்பான தொண் டினை ஆற்றி வரும் இளைஞர் குழு வில் அன்புக்குரிய விமல்ராஜ் முக்கிய மானவர். அடக்கமாக, திறமையாக கொடுத்த பணியினை உண்மைத் தன் மையுடன் ஆற்றிவரும் பாராட்டுக்குரியவர்.
உரிமையோடும்
- மகிழ்ச்சியோடும்
நீங்கள்
தான் வந்து என்னுடைய திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் உரிமையோடும், மகிழ்ச்சியோடும் இங்கே வந்துருக்கிறோம். ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு மேலாக எங்க
ளோடு தொடர்பு உடையவர். பள் ளிப்படிப்பை முடித்தவுடன் எங்களி டத்தில் வந்தவர். ஆசிரியர்
பட்டயப் படிப்பு, எம்.ஏ,பி.எட்,எம்.பில்., தற் போது முனைவர் படிப்பிற்கு தயா ராகி வரக்கூடிய அளவிற்கு எங்களால் தயாரிக்கப்பட்டவர் - எங்கள் வீட்டு பிள்ளை என்று பெருமையோடும், உரிமையோடும், மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிகச்
சிறப்பான பணி
பெரியார்
ஆசிரியர் பயிற்சி நிறு வனம் ஆயிரக்கணக்கான ஆசிரியர் களை உருவாக்கி இருந்தாலும், (2007-2009)கல்வி ஆண்டில் படித்தவர்கள் பல துறைகளில் மிகச்சிறப்பான
பணியினை மேற்கொண்டு வருவதை எண்ணி பார்க்கும் போது இதைவிட எங்களுக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்கிறது.
காவல்துறை,
ஆசிரியர்கள், அரசுத் துறை, தனியார் துறை, விவசாயம் உள்ளிட்ட பணிகளில் அசைக்க முடி யாத கொள்கை முடியாதவர்களாக இருந்து வருகிறார்கள். அதில் பலர் இங்கே வந்துள்ளனர்.
தஞ்சாவூர்
ஞானசேகரன், புதுக் கோட்டை கண்ணதாசன், கார்த்திகே யன், க.செல்வகுமார் அரியலூர்
அருண், மணப்பாறை மான்போர்டு ரீகன், சேலம் கண்ணன், திண்டுக்கல் சிவக்குமார், நாமக்கல் கண்ணதாசன், ஜெகதீசன், இளையராஜா, ஒட்டன் சத்திரம் திலீபன், ச.விஜய், ம.சக்திவேல், கரூர் செ.கொடியரசு, ஆறுமுகராஜா
பிரகாஷ், சுரேஷ் சிவகங்கை முரு கானந்தம், லால்குடி சங்கிலிமுருகன், திண்டுக்கல் லாரன்ஸ், கடலூர் ஜெயக்குமார் என்று ஒவ்வொரு தோழர்களும் அவர்களால் முடிந்த பணியைத் தேர்வு செய்து மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித் துக் கொள்கிறேன்.
ஆற்றல்
வாய்ந்தவர்கள்
ஒருகாலத்தில்
நமக்கெல்லாம் படிப்பு வராது என்று சொன்னார்கள். திராவிடர் இயக்கம், கல்வி வள்ளல் காமராசருடைய ஆட்சி தொடர்ந்த நிலையில், நம்முடைய இளைஞர்கள் எல்லோரும் படித்து, நல்ல சிறப்பான ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக் கிறார்கள்.
இன்று
நடைபெறக்கூடிய சுயமரி யாதை திருமணத்திற்கு கூட பல்வேறு தடைகள் இருந்திருக்கலாம்; ஆனால் இது தான் சரியான திருமண முறை என்பதை அறிந்து, மணமக்கள் இதனை உறுதியோடு இன்று செய்து கொள்ள இருக்கிறார்கள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்னும் எள்ளலும் கொடுமையும் நிரம்பிய கூற்று இப்போது எவர் வாயிலிருந்தும் வெளிப்படுவதில்லை.
செயல்
வீராங்கனைகள்
அழகழகான
சீருடைகள் அணிந்து பெண்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிக ளுக்கும் இன்று கோடிக்கணக்கில் செல்லும் காட்சியும், பல்வகைத் தொழில் நுட்பக் கல்விகளை பெண் கள் பயிலும் காட்சியும், ஆசிரியை களாகவும் அலுவலர்களாவும், மேலா ளர்களாவும், இயக்குநர்களாவும், தொழில் நுட்பக் கலைஞர்களாகவும், தொழிற்துறை உரிமையாளர்களா கவும் எண்ணிக்கையில் அடங்காப் பெண்கள் செயல் வீராங்கனைகளாக மிளிரும் மாட்சியும், நம்மைப் புரட் சிக் கவிஞரின் பெண்களால் முன் னேறக் கூடும்; நம் வண்டமிழ் நாடும் எந்நாடும் எனும் வரிகளைப் பாட வைக்கின்றன!
மணமக்கள்
நீங்கள் இருவரும் பெரியாரைப் பின்பற்றி சிக்கனமாக வும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் எல்லோருக்கும் எடுத்துக் காட்டான வாழ்வு வாழ வேண்டும்" என வாழ்த்தி மணவிழாவை
நிறைவு செய்தார்.