ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     பிரதமர் மோடியின்மேக் இன் இந்தியாவடிவமைப்பே வெளி நாட்டில் தயாரிக்கப்பட்டது. அவரது அமைச்சரவையில் 26 பேர், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 172 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது என தெலுங்கானா ராஷ்டிரிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

·     அருணாச்சலப் பிரதேசம் அருகே சீனா வீடுகளைக் கட்டி ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளது என்ற செய்திகள் வந்துள்ளதை, மத்திய வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாக கவனிக்கிறது என அரசு தெரிவித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     அய்.அய்.டி. ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற குழுவின் பரிந்துரைக்கு எதிரான புகாரின் அடிப்படையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை செயலாளருக்கு கருத்து தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து:

·   தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவினரிலும்கிரிமிலேயர்முறையை அமல்படுத்தலாம் என்றநாகராஜ் வழக்குதீர்ப்பினை அரசமைப்பு அமர்வு விசாரிப்பது தொடர்பாக  மாநிலங்களின் கருத்தையும் அறிந்து அறிக்கை அளித்திட மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தி டெலிகிராப்:

·     அயோத்தியில் ராமன் கோயிலுக்கு நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் நன்கொடை அளிக்கிறார். அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கொள்கையின் அடிப்படையில் அரசியல் தலைவர்கள், பொது சேவை அதிகாரிகள் மற்றும் அரசாங்க நபர்கள் மத வழிப்பாட்டு இடங்கள் மற்றும் சடங்குகளிலிருந்து விலகி நிற்க வேண்டும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

·     லாபம் ஈட்டும் நிறுவனங்கள் லாபம் ஈட்டும் மருத்துவமனைகளை அமைத்து, அதனுடன் மருத்துவக் கல்லூரிகளை இணைத்துக் கொள்ளலாம் என்ற மோடி அரசின் நடவடிக்கை, கல்வியை வணிகமயாக்கும் முயற்சி என கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிபிசி நியூஸ் தமிழ்:

· டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இந்திய குடியரசு தினத்தன்று நடத்த உள்ளதாக அறிவித்துள்ள ட்ராக்டர் பேரணி தொடர்பாகத் தலையிட முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

- குடந்தை கருணா

19.1.2021

Comments