கோவை-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் மதவழிபாட்டிற்கென ஆக்கிரமிப்பு - அதிகாரிகள் மெத்தனம்

பொங்கலூர்,ஜனவரி.30- கோவையிலிருந்து சிதம்பரம் வரை செல் லும் தேசிய நெடுஞ்சாலையில் மதவழிபாட்டிடங்களுக்கென ஆக்கிரமிப்பு தொடர்ந்து வரு கிறது. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக் காமல் மெத்தனப் போக்கை கையாண்டு வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

கோவை-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை(தே.நெ.எண்: 81) சூலூர்,பல்லடம்,பொங்கலூர்,காங்கேயம்,வெள்ளக்கோவில்,கரூர் வழியாக பயணித்து சிதம்பரம் செல்கிறது.இந்த சாலையில் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியான பொங்கலூரில் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள பயணிகள் நிழற்கூடம் முன்பாக விநாயகர் கோவில் என்ற மதவழிபாட்டிடம் அமைக்கப்பட்டு பூஜைகள் நடை பெற்று வருகிறது. சிறிய அளவில் இருக்கும் இந்த இடம் தற்போது  பெரிய அளவில் கட்டப்பட முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் 'விடுதலை' சார்பாக தொடர்பு கொண்டபோது ஆக் கிரமிப்புகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வழக்கமாக கூறும் பதிலையே கூறினார்.

ஏற்கெனவே இதே தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் வெள்ளக்கோவில் ஆகிய இடங்களில் இரவோடு,இரவாக கட்டப்பட்ட விநாயகர் கோவில் என்ற இரண்டு மதவழிபாட்டு இடங்களை அகற்றக் கோரி திராவிடர் கழகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலை துறையில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆக்கிரமிப்புகள் இன்று வரை அகற்றப்படாமல் இருப்பது குறித்தும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம்  எடுத்துரைக் கப்பட்டது.

Comments