நெல்லிக்குப்பம் பார்வதி அம்மாள் மறைவு

நெல்லிக்குப்பம் நகர திராவிடர் கழக பொறுப்பாளர் பு.சங்கர் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்கள் 7.1.2021 அன்று இரவு 10 மணிக்கு இயற்கை எய்தினார். எவ்வித சடங்குகளும் இல்லாமல் அம்மையாரின் உடல் இடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

மதிமுக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களான கொ.கிருஷ்ண மூர்த்தி, தணிக்கையாளர் கொ.குமரகுரு, கொ.ஜெயக்குமார், நகர கழக தலைவர் இளங்கோ, இரா.இரமணன், மதிமுக நிர் வாகிகளான ஜெ.இராமலிங்கம், பிரகாஷ், திமுக பொறுப்பாளர் களான சாராமணிக்குப்பம் பழனிவேல், ராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி முல்லை வேந்தன், மனித நேய மக்கள் கட்சியின் ஷேக்தாவுத், அதிமுக அய்யனார், சேகர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கார்த்திக், நகர்மன்ற மேற்பார் வையாளர் செல்வம் உள்ளிட்டோர் அம்மையாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியின் நினைவாக ‘விடுதலை' வளர்ச்சி நிதியாக

ரூ. 500 அளிக்கப்பட்டது.

Comments