செய்தியும், சிந்தனையும்....!

பேசி இருக்கலாமே!

பி.ஜே.பி. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து சென்னை வந்தார்.

இந்தியாவின் ஒரே கலாச்சாரம் தமிழர்களின் பாரம்பரிய உடையே என்றுதுக்ளக்' ஆண்டு விழாவில் பேசி இருக்கலாமே!

மவுனம்

சாதிப்பார்களோ!

தி.மு..வும் - .தி.மு..வும் ஊழல் கட்சிகள்: - எஸ்.குருமூர்த்தி

தி.மு..வை வீழ்த்த ரஜினியைக் கொண்டு வருவேன் என்று பா... மேலிடத்திற்கு ‘‘சத்தியப் பிரமாணம்'' செய்து கொடுத்த குருமூர்த்தி அய்யர்வாள் மூக்குடைபட்டு கீழே விழுந்து கிடந்தாலும், பூணூலில் மண் ஒட்டவில்லை என்ற தொனியில்பிலாக்கணம்' பாடி வருகிறார்.

இந்தப் பேர் வழியை தி.மு.. நன்கு புரிந்துகொண்டு இருக்கிறது.

குருமூர்த்தி வார்த்தையில் சொல்லவேண்டுமானால்ஆண்மை'யுள்ளவர்களாக .தி.மு.. இருக்கப் போவதில்லை என்பது மட்டும் உண்மை. ஊழல் கட்சி என்று .தி.மு..வை அடையாளப்படுத்தும் குருமூர்த்தி அய்யர்மீதுபாய்வார்களா' அல்லது அவர் சொல்லுவது உண்மைதானே என்று வாய்மூடி மவுனம் சாதிக்கப் போகிறார்களா - எங்கே பார்ப்போம்?

பெயரே ராம்நாத் கோவிந்த் அல்லவா!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்குக் குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை.

பெயரின் தொடக்கமே ‘‘ராம்'' என்றும் ஆரம்பிக்கிறது - மேலும் சங் பரிவார் வட்டாரத்தில் இருந்து வந்தவராயிற்றே! ஆனாலும் பாருங்கள் - ராமன் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அவர் அழைக்கப்படவில்லை. காரணம், அவர்.......!

செய்தி வாசிப்பது...

டில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் பேச்சுவார்த்தை நடத்திட நியமிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றவரும், பா...வின் தொழிற்சங்கமான பாரதீய கிசான் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான பூபிந்தர்சிங் மான், குழுவில் இருந்து விலகி, போராடும் விவசாயிகளின் பக்கமே நான் என்று அறிவித்துவிட்டார்.

பாவம், பா...வுக்குசேம் சைடு கோல்!'

கொட்டினால் தேள்!

அஞ்சல் துறைத் தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும்.

கொட்டினால்தான் தேள்.

.. போராட்டமாகுமோ!

டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக - ராகுல் தலைமையில் காங்கிரசார் போராட்டம்.

ஆமாம் - வேளாண் சட்டங்கள் மூன்றுமே ஒட்டுமொத்த விவசாயிகளுக்கான பிரச்சினைதானே  - இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் கிளர்ந்து வெடித்தால்...?

உம், இழிவுச் சிறப்போ!

தமிழகத்திலும் தாமரை மலரும்: - பா... தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.

தமிழகத்திலும் என்பதில் உள்ளலும்' உம்மை இழிவுச் சிறப்பு என்பது தமிழ் இலக்கணம்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image