பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, ஜன. 25- பொறியியல் படிப்புகளுக்கான நவம் பர், டிசம்பர் இறுதி செமஸ் டர் தேர்வு அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்கி நடை பெற இருக்கிறது. இந்த தேர்வு எவ்வாறு நடைபெறும்? இதற்கு மாணவர்கள் எந்த முறையில் தயாராக வேண் டும்? என்னென்ன மாதிரி யான வழிமுறைகளை பின் பற்ற வேண்டும்? என்பது போன்ற தகவல்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது. அந்த வழிகாட்டு நெறிமுறை களில் கூறப்பட்டிருப்பதாவது:-

* இறுதி செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக மாதிரி தேர்வு வருகிற 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடத்தப்பட உள் ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 18ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 2-ஆம் தேதி வரை அரியர் மாணவர்க ளுக்கும், தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கும் தேர்வு நடைபெறும்.

* இந்த தேர்வு ஆன்லைன் மூலமாகவே நடக்கும். ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வு கொள்குறி வகை வினாக்களாக கேட்கப்படும். மொத்தம் 30 ஒரு மதிப்பெண், 15 இரண்டு மதிப்பெண் என மொத்தம் 60 மதிப்பெண் ணுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப் படும்.

* தேர்வர்கள் லேப்டாப், செல்போன், டேப்லெட், கம்ப்யூட்டர் வாயிலாக இணையதளம் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் கள். இணையதளம் வாயி லாக தேர்வு தொடங்கிய பிறகு ஒரு மணி நேரத்துக்கு தொடர்ந்து இணைப்பில் இருக்க வேண்டும். ஏதாவது கோளாறு காரணமாக தடை ஏற்பட்டால் 3 நிமிடத்துக்குள் மீண்டும் இணைந்து கொள்ள வேண்டும்.

* செயற்கை நுண்ணறிவு மூலம் தேர்வை எழுத இருப் பவர்கள் கண்காணிக்கப்படு வார்கள். ஆகவே தேர்வர்கள் எந்தவிதமான முறைகேடு களில் ஈடுபட்டாலும் கண்டு பிடிக்கப்படுவார்கள். தேர்வு எழுதும்போது வேறு இணைய தளம், புத்தகம் பயன்படுத்த அனுமதி இல்லை. மற்ற நபரி டமும் தொடர்பு கொண்டு பதில் பெறக்கூடாது. தேவைப் படுமானால் ஏதாவது எழுதி பார்க்க 4 அளவு தாள் பயன்படுத்தி கொள்ளலாம். முறைகேட்டில் தேர்வர்கள் ஈடுபட்டால் அதற்கான தண் டனையும் வழங்கப்படும்

மேலும் இதுகுறித்த பல் வேறு தகவல்கள் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட் டுப்பாட்டு அலுவலகத்தின் https://aucoe.annauniv.edu/  என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments