'மயக்க பிஸ்கெட்டு'கள் ஓர் எச்சரிக்கை நூல் வழங்கல்

காவேரிப்பட்டனம், ஜன. 22-  கிருட்டினகிரி பன்னியாண்டி சமூக நலச்சங்க மாநில கவுரவ ஆலோசகர், தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் மீது மாறா பற்று கொண்டவர் காவேரிப் பட்டணம் கே.ஆர்.மாயாண்டி அவர் களின் (18.1.2021) முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் கிருட்டினகிரி காமராஜ் நகர் மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  

மறைந்த கே.ஆர்.மாயாண்டி படத் திற்கு மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சி.பி.அய். (எம்) பி.டில்லிபாபு மலர்தூவி மரியாதை செய்து நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் கோ.திராவிடமணி கலந்துகொண்டு நினைவேந்தல் உரை யாற்றி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் ஆலோசனைப்படி வெளியிடப் பட்டுள்ள கழக வெளியீடான தமிழக மக்களே, காவிகளைப் புரிந்துகொள் ளுங்கள்!  "மயக்க பிஸ்கெட்டு"கள் ஓர் எச்சரிக்கை! நூல்களை வெளியிட அரூர் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டில்லிபாபு, இந்திய மனித உரிமை கட்சி மாநில தலைவர் பி.துரைராஜ், பொதுச்செயலாளர் எம்.சுப்பிரமணி, தருமபுரி மாவட்டத் தலைவர் எம். தமிழ்மணி,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சி.பி.அய்(எம்) .ஆனந்தகுமார், சமூக ஆர்வலர் எம்.பாவேந்தன் மற்றும் பன் னியாண்டி சமூக நலச்சங்க பொறுப்பா ளர்களும், தோழர்களும் நூல்களை பெற்றுகொண்டனர். உடன் காவேரிப் பட்டணம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சி.சீனிவாசன், ஒன்றிய அமைப் பாளர் சி.இராசா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி கிருட்டினகிரி மாவட்ட பன்னியாண்டி சமூகநலச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்: இருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Comments