யாழ்ப்பாணம்: முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து வைகோ தலைமையில் இலங்கை துணைத் தூதரகம்முன் முற்றுகைப் போராட்டம் - தோழர்கள் கைது!

சென்னை,ஜன.11- இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரில் கொல்லப்பட்டவர்களின் நினை வாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. இந்த நினைவுத் தூண் கடந்த 8 ஆம் தேதி அன்று இரவோடு, இரவாக இலங்கை அரசால் இடித்து தள்ளப்பட்டது.  உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனைக் கண்டித்து திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,  திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ்,  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக் கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை  நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகில் இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில்  முற்றுகைப் போராட்டம் இன்று (11.1.2021) காலை நடைபெற்றது.

திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத் தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன் னியரசு, கொளத்தூர் மணி, மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி திராவிடர் கழகத் தோழர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

மதிமுகதுணைப்பொதுச்செயலாளர்மல்லை சத்யா, மதிமுக அமைப்புச்செயலாளர் .வந் தியதேவன்,டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்,ஜீவன் உள்ளிட்ட மதிமுக பொறுப்பாளர்கள் ஏராள மானவர்கள் பங்கேற்றனர்.

திராவிடர் கழகம் சார்பில் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்ட தலைவர் .முத்தையன், கூடுவாஞ்சேரி மா.இராசு, வட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் சா.தாமோதரன், தாம்பரம் நகர செயலாளர் சு மோகன்ராஜ், அரும்பாக்கம் சா.தாமோதரன், கோ.வீ.இராகவன், .குமார், சண்முகப்ரியன், யுகாகாந்தி,  தரமணி மஞ்சநாதன், தமிழ்செல்வம், சுப்பராயன் உள்ளிட்ட கழகப்பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Comments