சிறு மருத்துவமனைகளில் பணிபுரிய தனியார் மூலம் நியமனம் ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

சிறு மருத்துவமனைகளில் பணிபுரிய தனியார் மூலம் நியமனம் ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை,ஜன.5- தமிழகத்தில் சிறு மருத்துவ (கிளினிக்) பணியா ளர்களை தனியார் மூலம் நியமிப் பதற்கு காரணம் என்ன என்று விரிவான பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, வளர் நகரை சேர்ந்த வழக்குரைஞர் வைரம் சந்தோஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழ்நாட்டில் 2 ஆயிரம் சிறு மருத்துவமனை (மினி கிளினிக்) துவங்குவதற்கான அரசாணை கடந்த டிச. 5இல் வெளியானது. செவிலியர்களுக்கு சம்பளம் ரூ.14 ஆயிரம், பணியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதற்காக 585 மருத்துவ பல்நோக்கு பணியாளர்களும், 1,415 செவிலியர்களும் தனியார் மூலம் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் நேற்று (4.1.2021) விசா ரித்தனர்.

மனுதாரர் வழக்குரைஞர் புகழ் காந்தி ஆஜராகி, ‘‘தனியார் மூலம் நியமனங்கள் முறையாக நடக்க வாய்ப்பில்லை’’ என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிறீசரண் ரங்கராஜன் ஆஜராகி, ‘‘தேசிய சுகாதார ஆணையத்தின் விதிகளை முறையாக பின்பற்றியே நியமனம் நடக்கிறது. தற்காலிகமாகவே தேர்வு செய்யப்படுகின்றனர். சிறு மருத்துவமனை (கிளினிக்) மூலம் சுமார் 2.4 கோடி பொதுமக்கள் பயன் பெறுவர். தேர்தல் நடவடிக்கைகள் துவங்கினால் கரோனா நோய் தொற்று பணியில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற் காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 630 சிறு மருத்துவமனை  திறக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் சிறு மருத்துவனைகள் முழுமையாக செயல்படும்’’ என் றார். அப்போது நீதிபதிகள், ‘‘ஏன் செவிலியர்களும், மருத்துவ பணி யாளர்களும் தற்காலிக அடிப்படை யில் தேர்வு செய்யப்படுகின்றனர்’’ என கேள்வி எழுப்பினர். அரசுத் தரப்பில் விரிவான பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments