தந்தை பெரியார் நினைவு நாள் அமைதி ஊர்வலம்

திருவாரூர், ஜன. 20- தந்தை பெரியார் 47ஆவது நினைவு நாளை முன்னிட்டு திருவாரூர் கீழ வீதி காமராஜர் சிலையிலிருந்து மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் அமைதி ஊர்வ லம் புறப்பட்டு பேருந்து நிலைய ரவுண்டானாவில் உள்ள பெரியார் சிலையை அடைந்து சிலைக்கு மாவட்ட துணை தலைவர் அருண்காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.

தெய்வீக தமிழக சங்கம் (திருச்சி) என்ற பெயரில் வெளியிடப்பட்ட சிறு புத்தகத்திற்கு மறுப்பு புத்தகமாக திராவிடர் கழகம் சார்பில் அச்சிட்ட மயக்க பிஸ்கெட்கள் ஓர் எச்ச ரிக்கை புத்தகத்தை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தேவா வெளியிட .தி.மு. மாநில கொள்கை விளக்க துணை செயலாளர் சீனிவாசன் பெற் றுக்கொண்டார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் அசோகன், நகர திமுக செயலாளர் வாரை பிரகாஷ், முன்னாள் நகர மன்ற து.தலைவர் செந்தில், ஆர்.வி.எல்.ரவி, செ.அறிவு, ரஜினி சின்னா, கலைச்செல்வன், கழக மண்டல மகளிரணி செயலாளர் செந் தமிழ்ச்செல்வி, .முனியாண்டி, மாவட்ட துணை செயலாளர் வீரையன், மாவட்ட விவசாய அணி தலைவர் ரத்தினசாமி, மாவட்ட அமைப்பாளர் சுவாமிநாதன், நகர செயலாளர் இராமலிங்கம், நாகை மாவட்ட மு.செயலாளர் சிவானந்தம், மருதம் மாறன், திருநெய்ப்பேர் கோவிந்தராஜ், நன்னிலம் பொய்யாமொழி, ஓய்வு பெற்ற ரயில்வே கார்டு மாரிமுத்து, தமிழ்நேயன்,வீரமணி, காட்டூர் முத்து, காவ்யன் , காங்கிரஸ் பொறுப்பாளர் சக்தி செல்வ கணபதி, சமூக ஆர்வலர் ஜி.வர தராஜன், மக்கள் அதிகாரம் பொறுப்பாளர்கள் சண்முகசுந் தரம், ஆசாத், வி.சி. பொறுப்பா ளர் ஜெகன், பிஎஸ்பி பொறுப் பாளர் பத்மனாபன் மற்றும் ஏராளமான  பெரியார் பற்றா ளர்களும் கலந்து கொண்டனர். இதேபோல் திருவாரூர் மாவட் டம் சோழங்கநல்லூர் , நன்னி லம், சூரனூர் மற்றும் கண் கொடுத்தவனிதம் ஆகிய இடங் களில் உள்ள பெரியார் சிலை களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Comments