வாகன தயாரிப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்

சென்னை, ஜன. 9- புத்தாக்கமான தொழில்நுட்பத்தில் வாகனங்களை தயாரித்து வரும் எப்.சி.. (FCA) நிறுவனம், தற்போது தனது நான்கு புதிய வகை வாகனங்களை தயாரிப்பதற்காக 250 மில்லியன் டாலருக்கு அதிகமான முதலீட்டை மேற்கொண்டு, தனது பொறியியல் நடவடிக்கை களையும் விரிவுப்படுத்தியுள்ளது. மற்றும் 2021ஆம் ஆண்டின் இறு திக்குள் குறைந்தது 1000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவுள்ளது. மேலும் அய்தராபாத்தில் ஒரு உலகளாவிய டிஜிட்டல் தொழில்நுட்ப மய்யத்தில் முதலீடு செய்துள்ளதின் வழியாக பல்வேறு வேலை வாய்ப்புகளை அதிகரித்து வருகிறோம் என இந்நிறுவன இயக்குனர் டாக்டர் பார்த்த தத்தா தெரிவித்துள்ளார்.

Comments