ஒற்றைப் பத்தி : தே.வால்டர்!

லால்குடி மாவட்ட திரா விடர் கழகத் தலைவரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரரும், இறுதி மூச்சின் ஒரு சொட்டு இருந்தவரை இயக்கம், இயக் கம், தலைவர் தலைவர், கொள்கை, கொள்கை என்று வாழ்ந்து காட்டியவருமான ..இராவணன் (இயற்பெயர் தேவசகாயம்) அவர்களின் மக னுமான தே.வால்டர் அவர் களின் இயக்கத் தொண்டு ஒரு முன்னுதாரணமாக ஒளிவீசு கிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர் களின் 88 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிய விதம் வேறுபடுத்திக் காட்டி யுள்ளது - தனிச்சிறப்பாக மிளிர்கிறது!

கலை நிகழ்ச்சிகள், கருத் துரைகள் எப்பொழுதும் இயல் பாக நடைபெறக் கூடியதுதான்.

ஆனால், அங்கு நடந்த நிகழ்வு என்பது அனைவரின் கவனத்தையும் அப்படியே ஈர்த்துவிட்டது.

ஜாதி ஒழிப்புப் போராட்ட மான இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் என்கிறபோது திருச்சி மாவட் டம் லால்குடிச் சீமையும், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர்பிரதேசமும்' சட் டத்தை எரித்த வீரர்களின் பட்டியலில் முதன்மையான இடங்களைப் பெற்றன.

இயக்க வரலாற்றில் மட்டு மல்ல; இந்தியத் துணைக் கண்ட வரலாற்றிலேயே, ஏன் உலக வரலாற்றிலேயே ஒரு காகிதத் தில் அரசியல் சட்டம் என்று எழுதி கொளுத்தியதற்காக மூன்றாண்டுவரை தண்டனை பெற்றதும், 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக - நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்கள் உள்பட சிறைப்பட்டதும், சிறைக் கொடுமையால் உயர் நீத்ததும், சிறையிலிருந்து நோய் உடலை சுமந்து வெளியேறி, குறுகிய காலத்தில் மரணத்தைத் தழுவியதும் அப்பப்பா, சொல் லுந் திறனன்று.

கழகத் தலைவரின்  பிறந்த நாள் விழாவில் மாவட்டத் தலைவர் மானமிகு வால்டர் செய்தது என்ன? சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்று வாழ்ந்து கொண்டிருக்கும் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர்களான கீழவாளாடி கணேசன், அங்கமுத்து, கோவிந்தன், மைக்கேல், பிலவேந்திரன், கரிகாலன், பழனி, வெங்கடேசன், மாவடி யான், மருதை, சேட்டு, மேக நாதன் ஆகியோருக்குச் சால்வை அணிவித்து, தலா ரூபாய் ஆயிரம் அளித்து மகிழ்வித்தார்.

இது மட்டுமல்ல, ஒவ்வொரு மாதமும் இத்தோழர்களுக்கு ஒரு தொகையும், பிஸ்கெட் முதலிய பொருள்களும் அளித்து மகிழ்கிறார். சட்ட எரிப்பில் ஈடுபட்டு மரணம் அடையும் தோழர்களின் இறுதி நிகழ்ச்சிக்கு நிதி கொடுத்து கழகத்தின் அரவ ணைப்பை வெளிப்படுத்துகிறார்.

செல்வம் இருக்கலாம் - இயக்கத் தோழர்கள்மீதான பரிவு - அக்கறை என்ற செல் வம் பொருள் செல்வத்தை யும்விட சிறந்தது அன்றோ!

செல்வந்தர்கள் இந்த வகை யில் இயக்கத் தோழர்களுக்கு உதவலாம் அல்லவா!

 - மயிலாடன்


Comments