மூத்த பத்திரிகையாளர் திருச்சி ஜே.பி. மறைவு!
                                                                                                    திருச்சி மூத்த பத்திரிகையாளர் பெ.ஜெயபிரகாஷ் (வயது 79) 30.12.2020 அன்று இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 'தினகரன்' நாளிதழ் தொடங்கப்பட்ட காலம் முதல் பணியாற்றி ஓய்வு பெற்ற வர். கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட் டிருந்த இவர் 30.12.2020 அன்றிரவு மறை வெய்தினார். இவருக்கு மனைவி பொற் செல்வி, மகன் ராஜபிரி யன் ஆகியோர் உள்ளனர். அவரது இறுதி மரியாதை நிகழ்வு நேற்று (31.12.2020) மாலை  நடைபெற்றது.
Comments