அன்றும் இன்றும் என்றும் பெரியார்-சிறப்பு கருத்தரங்கம்!

தருமபுரி, ஜன. 30- தருமபுரி மாவட்டம் கடத்தூர் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் (நான்காவது மாதம்) அன்றும் இன்றும் என்றும் பெரியார் என்னும் தலைப்பில் தொடர் கருத்தரங்கம் கடத் தூர் தமிழ்ச்செல்வி அச்சகம்  முன்பாக 28.1.2021 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.தனசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மாரி. கருணாநிதி வர வேற்றுபேசினார். மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் மு.பிரபாகரன், பெ.சிவலிங்கம், மண்டல மாணவர் கழகச் செயலாளர் மா.செல்லதுரை  ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

கழக அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் தொடக்க உரையாற்றினார். ‘அன்றும் இன்றும் என்றும் பெரியார்என்னும் தலைப்பில் தருமபுரி மாவட்ட மேனாள் தலைவர் மா.கிருட்டினன் சிறப்புரையாற்றினார். 1879 பெரியார் பிறந்தது முதல், 1973 பெரியார் இறப்பு வரை பெரியார் காலங்களில் நடந்த முக் கியமான நிகழ்வுகள், போராட்டங்கள், அவர் எழுதிய  அறிக்கைகள், மேடைப் பேச்சுகள்,  அரசியல் அணுகுமுறைகள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்க நிகழ்ச்சியை மண்டல கழகத் தலைவர் .தமிழ்ச்செல்வன் ஒருங்கிணைத்து நடத்தினார்.  மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.சிறீதரன், திமுக ஒன்றிய செயற்குழு உறுப்பினர்  சோ.பாண்டியன், தாளநத்தம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் .முனுசாமி, கொண்டகரஅள்ளி கழகத் தலைவர் இரா. ஆனந்தன், கடத்தூர் ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் .பெரியார் ,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன் றிய செயலாளர் சா.பாலைய்யா, ரேகட அள்ளி நடத்துனர் தீ.மாதவன், முற் போக்கு அமைப்பு செம்மணஅள்ளி சுந் தர்ராஜன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன் றிய மாணவர் கழகத் தலைவர் பூபதி ராஜ், கடத்தூர் ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் பிரதாப், மகளிரணி தோழியர் கலா, திராவிடர் மாணவர் கழக தோழர்கள் சி.அறிவுமதி, பி.செந் தமிழ், மற்றும் பலர் கலந்து கொண்டனர் இறுதியாக விடுதலை வாசகர் வட்ட  செயலாளர் ஆசிரியர் .நடராஜன் நன்றி கூறினார்.

Comments