ஆசிரியருக்குக் கடிதம்

மரியாதைக்குரிய  தோழர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு தோழர் சண்முகவேல் எழுதும் மடல்

படுக்கையில் இருந்தபடியே எழுதுகிறேன். ஓய்வே எடுக்காத வன், இயற்கை ஓய்வெடுக்க வைத்துள்ளது.

ஓய்வு எடுக்கும்போதுவிடுதலை' எனக்கு நேரம் கழிப்பதற்கும். சிந்திப்பதற்கும்; அதோடு கழக தோழர்களோடு அலைபேசியில் தொடர்பு கொண்டு என் நேரத்தைக் கழிக்கின்றேன்.

ஒரு இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு திராவிடர் கழகம் ஓர் உதாரணம். கழக உறுப்பினர்கள் அனுதாபிகளின் இல்லங்களில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் இழப்புகளில் இயக்க தோழர்கள் கலந்து அவர்களுக்கு ஆறுதல் கூறி ஊக்கம் அளித்து ஒரே குடும்பமாக வாழ்வது தங்கள் இயக்கம்தான்.

பணி செய்வதில் தொண்டர்கள் தேனீக்கள் போல் வேலை செய்து, கொடுக்கும் பணியை சிறப்புடன் செய்வது தங்கள் தோழர்கள் தான்.

அதற்கு காரணம் பதவி, வாக்குகள் தேவையில்லை என்ற கொள்கைதான்.

ஒரு பெரியார் இந்தியாவை ஆட்டுவித்தார். அவர் வளர்த்த பிள்ளை ஆசிரியர் வீரமணி உலகத்தையே சுற்றி வருகின்றார். பெரியாருக்கு பெரியாராக வாழ்கிறார். கழகத்தின் குடும்பத்தில் பிறந்த நாள், நினைவு நாள் என எல்லோரும் தங்கள் இயக்கத்திற்கு மனம் உவந்து பொருளுதவி செய்வது ஓர் பெரிய நிகழ்வு.

அன்றாட வாழ்க்கையோடு கழகத்தை அரவணைத்து வாழ்கிறார்கள்.

தங்கள் கொள்கையை நானும் ஏற்றுக் கொண்டதால் நானும் கருத்துக்களை சிந்திந்து, ஜாதி, மதம், கடவுள் என்று நீங்குகிறதோ அதுவரை பெரியார் தேவை என்று உணர்கிறேன். இந்திய நாட்டைப் பொறுத்தவரை இது தீருவது கடினம். அதுவரை பெரியார் தேவை.

வயது ஏற ஏற தங்கள் தோழர்களுக்கு இளமை திரும்புகிறது. காரணம் கடவுள் நம்பிக்கை இல்லாதது தான்.

உடல் நலம் சிறப்பாகிவிட்டது என்றாலும் வீட்டுக் கைதியாக உள்ளேன்.

விரைவில் குணமடைந்ததும் சந்திக்க வருவேன்.

- தோழர் இரா.சண்முகவேல்

ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல்

Comments