செய்தியும், சிந்தனையும்....!

குங்குமமும் - திருநீறும்

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை - .தி.மு.. நிர்வாகி உள்பட மூவர் கைது.

கைது செய்யப்பட்டவர்கள் நெற்றியில் குங்குமம், திருநீறு சாத்துப்படியுடன் தான் காட்சி அளிக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவும்.

குற்றங்களின் பெருக்கமா?

இந்தியா முழுவதும் 4 லட்சத்து 30 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன; இதில் சென்னையில் மட்டும் 2 லட்சத்து 80 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

குற்றங்கள் அதிகம் நடைபெறும் தலைநகரமாக  சென்னை இருக்கிறது என்று தெரிய வருகிறது என்றாலும், அதனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சி என்ற வகையில் பாராட்டலாம்.

கார்ப்பரேட்டுகளுக்கான

தரகர் யார்?

வேளாண் சட்டங்கள் விடயத்தில் இடைத்தரகர் களுக்கு ஆதரவாக தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் செயல்படுகிறார்: - பா... செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு.

கார்ப்பரேட்டுகளுக்கான தரகராக மத்திய அரசே ஆன நிலையில், இப்படி எல்லாம் பேசலாமா?

என்ன காரணம் -

என்ன பேரம்?

கேங்மேன் பதவிக்குத் தேர்வானவர்களுக்குப் பணி நியமன ஆணை உடனே வழங்கப்பட வேண்டும்: - மின் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்.

ஏற்கெனவே தொழிலாளர் நலத் துறையில் எழுத்தர் பணிக்குத் தேர்வானவர்களின் பட்டியலும் வெளியிடப்படவில்லை.  என்ன காரணம் - என்ன பேரம்?

என்ன தயக்கமோ - தாமதமோ!

அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் மீதான முறைகேடு புகார் தொடர்பான விசாரணைக்கு ஆவணங்களைத் தருவதில் அண்ணா பல்கலைக் கழகம் தாமதம்.

ஏன், பரிசுத்தமானவர்கள் ஆயிற்றே - ஆவணங்களைக் கொடுப்பதில் என்ன தயக்கம் - தாமதம்!

பளிச்சென்று அடையாளம்!

துக்ளக்' ஆண்டு விழாவில் பங்கேற்க இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை ரத்து - அதற்குப் பதிலாக பி.ஜே.பி. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்.

ஆமாம், கட்சித் தலைவர்தானே கூட்டணிபற்றி எல்லாம் பேசத் தகுதி படைத்தவர் - இன்னொன்றையும் கவனித்தீர்களா? ‘துக்ளக்' ஆண்டு விழாவிற்குப் பி.ஜே.பி. தலைவர்தான் வருவார் - பளிச்சென்று எப்படி அடையாளம்?

இது என்ன புதுக்கரடி?

சி.பி.அய். கட்டுப்பாட்டில் இருந்த தங்கம்மாயமான' விவகாரத்தில் அறிவியல் பூர்வமான விசாரணை.

விசாரணை என்றாலே அறிவியல் பூர்வமாகத்தானே நடக்கவேண்டும்? இது என்ன புதுக்கரடி?

கவனிக்குமா

தமிழக அரசு?

திரையரங்குகளில் 100 சதவிகித அனுமதி: - தமிழக அரசு அறிவிப்பு.

சுகாதாரத் துறை மருத்துவ நிபுணர்கள், மத்திய அரசுக்கும் உடன்பாடில்லை. அதிருப்தி என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே!

, குலமாதாவா?

பிப்ரவரி 25 இல் தேசிய அளவிலானபசு'பற்றிய அறிவியல் தேர்வு - விரும்பும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதலாம்: - மத்திய அரசின் கால்நடைத் துறை அறிவிப்பு.

அது என்ன பசு மாட்டுக்கு மட்டும் தனித் தேர்வு. எருமை மாடு என்னபாவம்' செய்தது? ‘, கோமாதா குலமாதா' என்பதுதானே காவிகளின் கொள்கை - அந்த ஆட்சிதானே நடக்கிறது!

இஸ்ரோ:

தோசையில் விஷம்?

இஸ்ரோவில்

3 ஆண்டுகளுக்கு முன் தனது தோசையில் விஷம் வைத்தனர்: - விஞ்ஞானி தபன் மிஸ்ரா பரபரப்புப் புகார்!

மூன்றாண்டுகள் போராடியும், விசாரணை நடத்தப்படவில்லையாம்! யாரைத்தான் நம்புவதோ - மிகப்பெரிய அறிவியல் நிறுவனத்திலேயே இந்த நிலையா? நம்புவதற்குக் கடினம்தான் - ஆனாலும் நடந்திருக்கிறதே - பாதிக்கப்பட்டவரே மூன்றாண்டுகளாகப் போராடி வருகிறாரே!

பூணூல் இல்லையே!

ஆஸ்திரேலியா சிட்னி கிரிக்கெட் போட்டியில் சின்னப்பம்பட்டி நடராசனுக்கு இடம் இல்லை.

என்ன செய்வது? அவர் தோளில் பூணூல் இல்லையே!

Comments