ஏட்டுத் திக்குகளிலிருந்து

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     அய்தராபாத் கலோஜி நாராயண ராவ் மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 147 இடங்களில்139 இடங்கள் உயர்ஜாதியினர்க்கும், மீதம் 8 இடங்கள் மட்டுமே ஓபிசி பிரிவினர்க்கு அளிக்கப்பட்டுள்ளது. மா நிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு ஆணையின் படி, 147 இடங்களில், 77 ஓபிசியினரும், 5 தாழ்த்தப்பட்ட 11 பழங்குடியி னர் பிரிவினர்க்கும் ஒதுக்கப்பட்டிருக்கும்.

·     மத்திய அரசின் நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

·     அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் அரசின் கொள்கைகளில் தலையிட முடியாது. அரசமைப்புச் சட்டம் அதற்கு அனுமதிக்கவில்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி ,எம்.கன்வில்கர் கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     பசுவின் பெருமைகளை அனைவரும் தெரிந்து கொள்ள ஏதுவாக பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி தேசிய அளவில் மாணவர்களுக்கு பசு அறிவியல் தேர்வு நடத்தப்படும் என ராஷ்டிரிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கத்திரியா அறிவித்துள்ளாராம்!

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் உள் ஒதுக்கீடு அளிப்பது குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி ரோஹினி தலைமையிலான ஆணையத்தின் பதவிக் காலம் ஜனவரி 31ஆம் தேதி முடிவடைவதால், ஆணையத்தின் நீட்டிப்பு குறித்து மத்திய அமைச்சரவை இன்று முடிவெடுக்கும் என தெரிகிறது.

·     கர்நாடகா அரசுப் பணிகளில் கன்னட மொழியில் தேர்ச்சி பெறுவதைக்  கட்டாயமாக்க சிவில் சர்வீஸ் விதிகளில் மாற்றம் செய்து இது தொடர்பாக பொதுமக்களின் கருத்தை அரசு கேட்டுள்ளது.

தி டெலிகிராப்:

·     மத்திய அரசின்  புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட மத்திய விஸ்டா திட்டத்தை மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி, நிலப் பயன்பாட்டை மாற்றியது இவற்றில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புக்கிடையே செயல்படுத்துகிறது என தெரிவித்து, இந்த திட்டத்தை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றத்தின் இது தொடர்பான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி சஞ்சய் கன்னா தனது தீர்ப்பாக கூறியுள்ளார்.

·     நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் ஜனவரி 29 முதல் ஏப்ரல் 8 வரை நடத்தப்படலாம் என்றும், பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யலாம் என்றும்  நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிபிஏ) அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

- குடந்தை கருணா

6.1.2021

Comments