மத்திய அரசு ஆணவத்தை விடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும்

ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடில்லி, ஜன.6 மத்திய அரசு ஆணவத்தை விடுத்து வேளாண் சட் டங்களை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டில்லி எல்லையில் 41-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரு கின்றனர். விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட 7 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. விவசாயிகள் அமைத்துள்ள தற்காலிக கூடாரங்களுக்குள் மழை நீர் புகுந்தது. மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், கடுமையான குளிராலும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட் டுள்ள சுட்டுரை செய்தியில் கூறியுள்ளதாவது:

மோடி அரசின் ஆணவமும், அக்கறையின்மையும் 60 விவசாயிகளின் உயிரைப் பறித்திருக்கிறது. விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதற்குப் பதிலாக, கண்ணீர்புகை குண்டுகளால் அவர்களை அரசு தாக்கிக் கொண்டிருக்கிறது. தங்களின் நட்புக்குரிய தொழில் முதலாளிகளின் நலன்களைக் காக்கவே இதுபோன்ற மிருகத்தனம் கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கிறது. அரசாங்கம் ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும்

இரா. முத்தரசன் வலியுறுத்தல்

புதுக்கோட்டை,ஜன.6- தமிழகத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை முழு மையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியது: சென்னையில் நாளை (இன்று) 6.1.2021 காத்திருப்புப் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கங்களின் கூட்ட மைப்பு அனுமதி கேட்டிருந்த நிலையில், மாநகரக் காவல் துறையினர் கடந்த ஒரு வாரமாக அனுமதி கொடுக்காமல் இழுத் தடித்து வருகின்றனர். ஒருவேளை தடை விதித்தாலும் தடையை மீறி போராட்டம் நடைபெறும். கரோனா பொது முடக்கம் காரண மாக தமிழகத்தில் அமலிலில் இருக் கும் 144 தடை உத்தரவு, ஜனநாயக முறைப் படியான போராட்டங்களுக்கு தடையாக உள்ளது. எனவே, இந்த தடை உத்தரவை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும்.

மத்திய பாஜக அரசு, வருமான வரித்துறை உள்ளிட்ட துறைகளை கையில் வைத்துக் கொண்டு திரைத்துறையினரையும், விளை யாட்டுத் துறையினரையும் தங்கள் கட்சியில் சேர வற்புறுத்தியும், அல்லது தனிக் கட்சி தொடங்க நிர்பந்தித்தும் வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற முயற்சி தோல்வியடைந்திருக்கிறது என்றார்.

 

வேளாண் குடி மக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது: . சிதம்பரம்

சென்னை, ஜன.6 மத்திய அரசுக்கும், விவ சாய தலைவர்களுக்கும் இடையிலான 7-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலை யில், .சிதம்பரம் வேளாண் குடிமக்களே வெற்றி பெறுவார்கள் என சுட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாய தலைவர்களுக்கும் இடையில் 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்றா லும் உடன்பாடு எட்டப்படவில்லை.

விவசாயிகள் போராட்டத்தை தீவிரப் படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர். என்றாலும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறமாட்டோம் என மத்திய அரசு பிடி வாதமாக உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான .சிதம்பரம் சுட்டுரைப் பக்கத்தில்

உழவினார் கைம்மடங்கின் இல்லை வாழ்வதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை" என்பதை விரைவில் அரசு உணரும்

வேளாண் குடி மக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது. வேளாண் குடி மக்களே வெற்றி பெறுவார்கள்

விவசாயிகளுடன் நடைபெற்ற 7-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு யார் காரணம், என்ன காரணம்?

மத்திய அரசின் பிடிவாதமும் தன் தவறை ஒப்புக் கொள்ளவே கொள்ளாத அகந்தை யுமே காரணங்கள்’’ என பதிவிட்டுள்

ளார்.

 

 

 

Comments