எச்சரிக்கை!

'துக்ளக்' 3.2.2021 பக்கம் 1

நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள் என்றும் (வேசி மக்கள்), பஞ்சமர்கள் என்றும் (தீண்டப்படக் கூடாதவர்கள்), பெண்களை விபச்சார தோஷமுள்ளவர்கள் என்றும் "துவேஷிக்கிற" ஒரு மதத்தை பார்ப்பனரைத் தவிர்த்த அனைவரும் புறக்கணிப்பது என்று முடிவு எடுத்தால் பா... சங்பரிவார்க் கூட்டம் வேட்டியைக் காணோம் - துண்டைக் காணோம் என்று பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட்டம் பிடிக்காதா?

சிறுபான்மையினர் பிரஜா உரிமையின்றி (குடி உரிமை யின்றி) வாழ வேண்டும் என்று கூறுகிற கோல்வால்கரின் வழி வந்த இந்தக் காவிகளை விரட்டுவதில் சிறுபான்மை யினரும் இணைந்தால் இவர்கள் ஒண்டுவதற்கும் இடம் இருக்காதே!Comments