ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்து சட்டம் குறித்து அறிக்கை அளித்திட குழுவினை நியமித்துள்ளது.

·     வேளாண் சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் உறுப்பினர்கள் அச்சட்டத்திற்கு ஆதரவானவர்கள் என போராடிவரும் விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

·     மழலைப் பள்ளிகளில் சேர குழுந்தைகளுக்கு தேர்வு நடத்துவது அதில் தேர்ச்சி பெறாத குழந்தைகளின் மனதில் துவக்கத்திலேயே தோல்வி மனப்பான்மையை உருவாக்கும் என மூத்த கல்வியாளர் தேவி கர் குறிப்பிட்டுள்ளார்.

·     நாடாளுமன்றப் புதிய கட்டடம் கட்டுவது அரசின் கொள்கை எனக் கூறிய உச்ச நீதிமன்றம் தற்போது வேளாண் சட்டத்திற்கு தடை விதிக்காமல் குழு அமைப்பது சரியான தீர்ப்பு அல்ல என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்கள் குறித்து அமைத்துள்ள குழுவினால் மேலும் பிரச்சினைகள்தான் உருவாகும் என தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

·     வேளாண் சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசின் அதிகாரத்தில் நுழைவதாகும்.  நீதிமன்றத்தின் நடவடிக்கை சட்டம் செல்லுமா என்று கூறவேண்டியது மட்டுமே. பஞ்சாயத்து செய்வது அல்ல என மூத்த பத்திரிக்கையாளர் பானு பிரதாப் மேத்தா கருத்திட்டுள்ளார்.

·     உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள வேளாண் சட்டம் தொடர்பான குழு குறித்து காங்கிரஸ் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மத்திய பிரதேசம் குவாலியரில் காந்தியைக் கொன்ற கோட்சேவின் நினைவாக ஹிந்து மகாசபையின் சார்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது.

தி டெலிகிராப்:

·     வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தானி அமைப்பினரும் ஊடுருவியுள்ளனர் என மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, உரிய அறிக்கையை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

·     சீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் பூசைகளை அரசு கட்டுப்படுத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கில், உயிர் வாழும் உரிமையை விட மத உரிமை பெரிதல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

- குடந்தை கருணா

13.1.2021

Comments