குவைத்தில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா

குவைத், ஜன. 12- குவைத்தில் உலகத் தத்துவ ஞானி தந்தை பெரியார் நூலகம் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 88 ஆவது அகவை நாள் விழா காணொலி மூலம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குவைத் பெரியார் நூலக காப்பாளர் சசிபெருமாள் வரவேற்புரையாற்றினார். அப்பொழுது ஆசிரியரின் பிறந்த நாள் பிரகடனமாக "திமுக தலை மையிலான திராவிட ஆட்சியை நிறுவிட உழைப்போம் இதுவே எமது பிறந்தநாள் செய்தி" எனும் பிரகடனம் உறுதியேற்கப்பட்டது. குவைத் திமுகவின் தலைவர், திரா விட இயக்க ஆய்வாளர் ஆலஞ்சியார் துவக்க உரையாற்றி நிகழ் வினை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் குவைத் தி.மு.. தகவல் தொழில்நுட்ப அணி செய லாளர் மேட்டுவிளை .ஷாந வாஸ்,  குவைத் தி.மு.. துணைப் பொருளாளர் கறம்பக்குடி .ஜாபர் சாதிக், குவைத் தி.மு.. செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இணைச் செயலாளர் கொணலை .மணிகண்டன் ஆகியோரின் செயல்பாடுகளை பாராட்டி அவர் களுக்கு பெரியார் நூலகம் சார்பாக .செல்லப்பெருமாள் "திராவிடச் செல்வம்"  விருது வழங்கினார். மேலும் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் அவர்கள் அனுப் பியிருந்த  வாழ்த்து கடிதங்களையும் அவர்க ளுக்கு வழங்கி சிறப்பிக்கப் பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தின் பொருளாளர் வீ.குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நாவலாசிரியர், எழுத்தாளர் பானு இக்பால் Ôதிராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் நடைபெறும் போர்Õ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

 குவைத் திமுக துணைத் தலைவர் டாக்டர் சாயின்ஷா, வர்த்தகர் அணி செயலாளர் மன்னை ரபீக்,  இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் நெல்லை கருத்தப்பாண்டி,  நெல்லை கால்டு வெல் பத்மநாபன், மதியழகன்,  .இராமன், மலேசியா திமுக வேல்முருகன், மதிமுக மணிவாச கம், பெ.சீனிவாசன், திண்ணைத் தோழர்கள் பிரச்சார மய்யம் முகவை அப்பாஸ், குவைத் கடற் கரை நண்பர்கள் குழு கேப்டன் ஷேக் இஸ்மாயில், திருமங்கலக்குடி ரோட்டரி சங்க தலைவர் சையது லியாகத் அலி,  வெல்டன் முகமது கவுஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளை கொண் டாடும் வகையில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை குவைத் திமுக செயலா ளர் சிதம்பரம் .தியாகராஜன் ஒருங்கிணைத்தார்        

விழா முடிவில் குவைத் திமுக இளைஞரணி செயலாளர் ஆலங் குடி .வி.எஸ்.கார்த்திக் நன்றி உரை கூறினார்

Comments