தமிழக அரசின் ஜி.யூபோப் நினைவு விருது பெற்ற பேராசிரியர் உல்ரிக் நிக்கோலஸ்சுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

அன்புள்ள பேராசிரியர் உல்ரிக் நிக்கோலஸ் அம்மையார் அவர்களுக்கு,

அன்பு வணக்கம். தங்களுக்கு தமிழக அரசின் ஜி.யூ.போப் நினைவு விருது இவ்வாண்டு வழங்கப்பட்டிருப்பது அறிய மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

உளங்கனிந்த வாழ்த்துகள், பாராட்டுகள்!

தங்களுக்குக் கிடைத்தது நம் அனைவருக்கும் கிடைத்த பெருமையாகவே கருதுகிறோம்.

நல்ல உடல் நலத்துடன் தாங்கள் தமிழ்த்தொண்டும், பெரியார் பெருந்தொண்டும் செய்யும் வண்ணம் 2021 வழிவகுத்துப் பெருமை சேர்ப்பதற்கு இது ஒரு நல்ல ஊக்க மாத்திரையாகும்.

தங்களன்புள்ள,

- கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

15.1.2021

Comments