பெரியார் பெருந்தொண்டர் நீலமேகத்திற்கு கழகத்தினர் வீரவணக்கம்

திருச்சி, ஜன. 16- திருச்சி பீமநகர் முதுபெரும் பெரியார் தொண்டர் நீலமேகம் 14.1.2021 அன்று மறைவுற்றார். அவரது உடலுக்கு 15.1.2021 காலை திருச்சி மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது தமிழர் தலைவர் விடுத்த இரங்கல் அறிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டது.

திருச்சி பீமநகர் பகுதி தலைவர் நீலமேகம் (வயது 98) - அவருடைய மனைவி தங்கம்மாள் (வயது 86) (மறைவு). நங்கவரம் பண்ணை காவலாளி சாத்தன் பெரிய மந்திரவாதியின் மகள் தங்கம்மாள் - மொட்டையாண்டி மகன்-சடையன் பூசாரி பேரன் நீலமேகத்திற்கும் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. நங்கவரம் பண்ணையிலிருந்து சவாரி மேடை பகுதியை ஆதிதிராவிடர்களுக்கு பிரித்து கொடுக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்திய சட்ட எரிப்பு வீரர் மாணிக்கம் அவர்களின் அண்ணன் நீலமேகமும் இணைந்து நடத்திய போராட்டம்தான் சவாரி மேடை போராட்டம். அந்தப் போராட்டத்தை தொடர்ந்து திராவிடர் கழகத்திற்கு மிகப்பெரிய செல்வாக்கு வளர்ந்து வரும் வேளையில் கலைஞர் குளித்தலையில் தேர்தலில் நின்றபோது கலைஞரின் வெற்றிக்கு காரணமாகவும் அப்போராட்டம் அமைந்தது ஆகவே மந்திரவாதி மகள் தங்கம்மாள். பூசாரி பேரன் நீலமேகத்திற்கும் தந்தைபெரியார் தலைமையில் திருமணம் முடிந்து இருவரும் பெரியார் தொண்டர்கள் ஆயினர். அவர் பிள்ளைகளை பெரியார் கொள்கையோடு பகுத்தறிவாளர் களாக வளர்த்து ஆளாக்கினார். நீலமேகம் அவர்களுடைய உடலை எந்த சடங்கு சம்பிரதாயமின்றி திராவிடர் கழகத் தோழர்கள் மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் வீர வணக்கம் செலுத்தி அடக்கம் செய்தனர்.

திருச்சி இரா. மோகன் தாஸ் திருச்சி மாவட்ட செயலாளர். திருச்சி சா .துரைசாமி திருச்சி மாநகர தலைவர், சி.கனகராஜ் மாநகர அமைப்பாளர், முபாரக் அலி.பீமநகர் பகுதித் தலைவர், மகா மணி. சோமரசம்பேட்டை இளைஞரணி தலைவர், நேதாஜி மார்க்கெட் பகுதி செயலாளர், அங்கமுத்து லால்குடி மாவட்ட செயலாளர், ஜெயராஜ் வண்ணாரப்பேட்டை பகுதி தலைவர், யோகராஜ் பெரியார் பெருந்தொண்டர், மணிவேல் மார்க்கெட் பகுதி தலைவர், குத்புதீன்... மாநகர தலைவர் ஆகியோர் இரங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் தொலைபேசியில் இளைய மகன் மேகநாதனிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
கோயிலும், 'தினமணி'யும்!
எங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்!
Image