கருவறைக்குள் நுழைய...

சுந்தர் காளி: கருவறைக்குள் நுழையத் தகுதி பெற்றவர்கள் சிவப்பிராமணர்கள் மட்டும்தானே?

தொ..: ஆமாம். பிராமணர்களுக்குத் தாய்மொழியாகத் தமிழை ஏற்றுக்கொள்வ தற்கு மனம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவர்களுக்குத் தமிழ் தவிர, வேறு மொழி எதுவும் தெரியாது என்பதும் நமக்குத் தெரியும். அவர்களின் வீட்டு மொழி தமிழ்தான். அதனால்தான் பெரியார், தமிழன் என்றால் தமிழ்மொழி பேசுகின்ற பார்ப்பனர்கள் உள்ளிட்ட எல் லோரும் வந்துவிடுவார்கள். அதனால் தான் பார்ப்பனர் அல்லாதோர் என்ற அடையா ளத்தை உருவாக்கினேன் என்கிறார்.

பல்லவ அரசின் தொடக்கக் காலத்தில் நிறையப் பார்ப்பனர்கள் தமிழகத்திற்கு வந்தார்கள். ஏனென்றால், குறைந்தபட்ச வேதம் படித்தவர்களுக்குக்கூட நிலங்க ளைத் தானமாகத் தந்தார்கள். வேதப் படிப்பில்க்ரமம்வரைக்கும் படித்தவர் களுக்குக்கூட நிலம் தந்தார்கள். அதுதான்கிராமம்ஆயிற்று. அவ்வாறு வந்தவர்கள் தமிழ் நாட்டில் பெண் எடுத்துத் திருமணம் செய்து கொண்டார்கள். இதை நான் மட்டும் சொல்லவில்லை; மீனாட்சி, என்.சுப்பிரமணி யம் முதலிய பிராமண ஆய்வாளர்களே எழுதியுள்ளார்கள். அவர்கள் தமிழ்ப் பெண் களைத் திருமணம் செய்து கொண்டதால் அவர்களின் பிள்ளைகள் தந்தை மொழியை மறந்து இயல்பாகவே தாய்மொழியான தமிழைப் பற்றிக் கொண்டார்கள். ஆனால், அவர்களின் தந்தை மொழி சமஸ்கிருதம் என்பதை மறந்துவிடவில்லை. இயல்பாகத் தாயின் மொழிதான் குழந்தைகளுக்கு வரும். அதனால்தான் தாய்மொழிஎன அழைக் கின்றோம். இங்கு வந்த பார்ப்பனர்கள் தாய்மொழியான சமஸ்கிருதம் செத்துப் போய் விட்டது. இன்னும் அவர்களின் அடி மனதில்தமிழ்தங்கள் மொழி அன்று என்ற உணர்வு இருக்கிறது. இந்தப் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் பெண் கொண்டவர்கள். வந்தேறி இனம் ஒன்று உலகின் இன்னொரு பக்கத்தில் குடியேறி வேறொரு சமூகத்திடம் பெண்கொண்ட வரலாறு உலகில் உண்டு. மாப்பிள்ளை முஸ்லீம்கள், சிரியன் கிறித்து வர்கள் கேரளாவில் உண்டு. இவர்கள் அயல்நாடுகளிலிருந்து வந்து மலையாளப் பெண்களை மணந்துகொண்டவர்கள். மாப்பிள்ளை முஸ்லீம்கள் என்றால் மாப் பிள்ளைகளாக வந்தவர்கள் என்பது பொருள். அது போலத் தமிழ்நாட்டில் கீழக் கரை இசுலாமியர்கள். இவர்கள் அரபு நாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் இனக் கலப்புச் செய்தவர்கள். கீழக்கரை இசுலாமி யர் சாமந்தப் பண்டசாலிகளாகத் தமிழகத் திற்கு வந்தவர்கள். இங்கேயே தங்கித் தமிழ கத்தில் பெண் எடுத்தார்கள். பார்ப்பனர்கள் கூட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சமஸ்கிருதம் கற்றுத்தரவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ் கிருதம் வந்தபோதுகூடப் பெண்களுக்குக் கற்றுத்தர மறுத்துவிட்டார்கள். இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. பெண் சமஸ் கிருதம் கற்கத் தகுதியற்றவள் என்பது அவர்கள் வாதம். சமஸ்கிருதத்தைப் பெண் ணுக்கும் சொல்ல முடியாது; பேதைக்கும் சொல்ல முடியாதுஎனப் பார்ப்பனர்கள் அப்போது எழுதினார்கள். அதுபோலக் கீழக்கரை முஸ்லீம்களும் அரபுமொழியை இழந்துவிட்டார்கள். அவர்களுக்குத் தமிழ் தான் தாய்மொழி. எனவே, வந்தேறிகள் தங்கள் மொழியை இழந்து தங்கள் குழந் தைகளின் மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்வது என்பது உலக இயல்பு. பார்ப்பனர்கள் தமிழகத்தில் வந்திறங்கிப் பெண் கொண்டவர்கள். அதனால்தான் வட நாட்டுப் பார்ப்பனர்களுக்கும் தென்னாட் டுப் பார்ப்பனர்களுக்கும் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு உண்டு. தமிழ்நாட்டுப் பார்ப்பனர் கள் நம்மைப்போல முறைப் பெண், முறை மாப்பிள்ளை உறவுடையவர்கள். வட நாட் டுப் பார்ப்பனர்களிடம் இம்முறை கிடையாது.

- தொ.பா.வின் நேர்காணலில் இருந்து...

Comments