‘‘பா.ஜ.க.வினரே எங்கள் ஊருக்குள் நுழையாதீர்!'' உ.பி.யில் பல ஊர்களிலும் ஊர் மக்கள் எதிர்ப்புப் பதாகைகள்!

மீரட், ஜன. 31 உத்தரப்பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள பல ஊர்களில் பாஜக வினர் ஊருக்குள் வரவேண்டாம் என்று பதாகைகளை பொதுமக்கள் தொடர்ந்து ஒட்டி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் விவசாயச் சட்டத் திற்கு எதிராக போராடும் விவசாயிகளை மிரட்டி அபராதம் விதித்து வருகிறது அம்மாநில அரசு, இதனால் கோபமடைந்த விவசாயிகள் மாநிலத்தில் பல இடங்களில் இங்கு பாஜகவினருக்கு இடமில்லை, ஊருக் குள் வரவேண்டாம் என்று பதாகைகள் எழுதிவைக்க ஆரம்பித்து விட்டனர்.

 டில்லியை ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஒன்றான மீரட்டில் உள்ள அம்ரோகா, கஜ்ரலா, கும்ரால், பகாதூர்பூர் போன்ற ஊர்களில் பாஜகவினருக்கு எதிராக பதாகைகளை ஒட்டி வருகின்றனர்.

அப்பதாகையில் உள்ள வாசகம் வருமாறு:

‘‘பாஜகவினர் இந்த ஊருக்கு வருவதைத் தவிர்க்கவும், அதையும் மீறி வந்தால், அவர்கள் வரும் வாகனங்கள், அவர்களுடன் வருபவர்கள் மீது தாக்குதல் நடந்தால் ஊர்மக்கள் பொறுப்பேற்கமாட்டோம்'' என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

 இதனை அடுத்து அவ்வூருக்கு மாவட்ட வருவாய்த் துறை  அதிகாரிகள் சென்று மக்க ளிடையே பேச்சுவார்த்தை நடத்தி வரு கின்றனர்.

Comments