இராமேசுவரத்தில் பொங்கல் விழா

தங்கச்சிமடம், ஜன. 20- பொங்கல் திருநாளை முன்னிட்டு 14.1.2021 அன்று திராவிடர் கழகம் சார்பில் தங்கச்சிமடம் பேக்கரும்பு அரியாங்குண்டு இராமேசுவரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கழகக் கொடிகள் ஏற்றப்பட்டன. இராமேசுவரத் தில் உள்ள மனோலயா மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2000 இரண்டாயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மு.முருகேசன், ஒன்றிய செயலாளர் இரா.காம ராசு, ஒன்றிய தலைவர் தேவசகாயம், தங்கச்சிமடம் நகர செயலாளர் இசையாஸ், தலைவர் குழந்தைராயர், தங்கச்சி மடம் ஊராட்சி திமுக கவுன்சிலர் பேரின்பம் மற்றும் ராஜகுமாரன், அழகேசன், ரவிச்சந்திரன், ஆரோக்கியசாமி உட்பட ஏராளமான கழக தோழர்கள் பங்கு பெற்றனர்.

தந்தை பெரியார் நினைவு நாள் தெருமுனை கூட்டம்

காட்டுமன்னார்குடி, ஜன. 20- காட்டுமன்னார்குடி தந்தை பெரியார் நினைவு நாள் ஊர்வலம்,  24.12.2020 அன்று மாலை 5 மணிக்கு மீன்சுருட்டி சாலையிலிருந்து புறப்பட்டு கடை வீதிகள் வழியாக பேருந்து நிலையம் வந்து அடைந்தது.

ஊர்வலத்திற்கு மாவட்ட கழகத் துணைத்தலைவர் மழவை கோவி.பெரியார்தாசன் தலைமையேற்றார். ஒன்றிய கழக செயலாளர் ஆனந்தபாரதி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் ஒன்றிய கழக தலைவர் இரா.செல்வகணபதி, திமுக நகர செயலாளர் கணேசமூர்த்தி, விடுதலை சிறுத்தை நகர தலைவர் சக்திவேல், திராவிடர் கழக நகர செயலாளர் பன்னீர்செல்வம், நகர கழகத் தலைவர் பஞ்சநாதன், திருமுட்டம் ஒன்றிய கழக தலைவர் கு.பெரியண்ணசாமி, முன்னாள் மாவட்ட அமைப்பாளர் மு.தென்னவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் துரை.ஜெயபால் மற்றம் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன் சிறப்புரையாற்றினார்.

Comments