‘‘நாங்கள் திராவிடத்தின் வாரிசுகள்தான்'' என்று கொள்கையைச் சொல்லி ஓட்டு கேட்கிறார் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்

‘‘தமிழ்நாடும் - தேர்தல் அரசியலும்!'' காணொலி சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்

சென்னை, ஜன. 9  தி.மு.. ஒரு அரசியல் கட்சி - அரசியல் கட்சிக்கு எந்த எல்லையோ அந்த எல்லையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால்,  கொள்கைபூர்வமாக இருக்கக் கூடிய அளவிற்கு அவர்கள் தெளிவாக இருக் கிறார்கள். அதில் ஒளிவுமறைவு இல்லாமல் இருக்கிறார்கள். கொள்கையோடு இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம், ஒவ்வொரு மாவட்டத்திலும் தன்னுடைய தேர்தல் பிரச் சாரத்தை காணொலிமூலம் நடத்துகிற திராவிட முன் னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள், தெளிவாகக் கொள்கையைச் சொல்லி ஓட்டு கேட்கிறார். நாங்கள் ஏன் பதவிக்கு வரவேண்டும் என்று சொல்லும் பொழுது, நாங்கள் "திராவிடத்தின் வாரிசுகள்தான்" - கொள்கையைச் சொல்லி ஓட்டு கேட்கிறார்! அதற்காக அவர் அஞ்சவில்லை. ஒளிவு, மறைவின்றி சொல்கிறார் என்று விளக்கவுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘தமிழ்நாடும் - தேர்தல் அரசியலும்''

சிறப்புக் கூட்டம்!

2.1.2021   அன்று மாலை  காணொலிமூலம்  நடைபெற்ற ‘‘தமிழ்நாடும் - தேர்தல் அரசியலும்!'' சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள்  உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

13 பெண் நீதிபதிகள் உள்ளே ஒரே நீதிமன்றம் - சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுச் சென்ற தலைமை நீதிபதி சொன்னார், ‘‘13 பெண் நீதிபதிகள் உள்ளே ஒரே நீதிமன்றம், இந்தியாவிலேயே சென்னை உயர்நீதிமன்றம்தான்'' என்று. அதற்குக் காரணம் என்ன? இதுதான் திராவிடத்தின் சாதனை. திராவிடம் என்ன செய்தது என்று கேட்கிறீர்களே, இது ஒன்று போதாதா?

விழியிருந்தும் பார்வையற்றவர்களாக இருக்கிறீர்களே, கொஞ்சம் அகலமாக உங்கள் விழிகளைத் திறந்து பாருங்கள்.

தந்தை பெரியாரின்  மரண சாசனம்'

தந்தை பெரியாருடைய கடைசி உரை - தியாகராய ர் நகரில் அவர் கடைசியாக 1973 டிசம்பர் 19 ஆம் தேதி பேசும்போது சொன்னார் - அந்த உரையைப் படித்துப் பாருங்கள். ‘மரண சாசனம்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

அந்த உரையில், ‘‘நான் நாளைக்கு சாகப் போகின்ற கிழவன்.  உங்கள் நிலை என்ன? உங்களை "சூத்திரர்களாக" ஆக்கியிருக்கிறார்கள்; கல்வி உரிமை, மற்ற உரிமைகள் இல்லாமல் ஆக்கி இருக்கிறார்கள். இந்த இயக்கம், இந்தத் தி.மு.. ஆட்சி இருக்கின்ற வரையில்தான் உங்களுக்குப் பாதுகாப்பு. இல்லையானால், வெளியே பேசப் பயப்படக் கூடியது - வெட்கப்படக் கூடியது எல்லாம் நாளைக்கு இந்த ஆட்சி இல்லையானால், பகிரங்கமாகப் பார்ப்பான் பேசுவான்'' என்று தத்துவ ரீதியாக சொல்லியிருக்கிறார். அதுதான் அவரின் தொலைநோக்கு.

இப்பொழுது நடக்கிறதா? இல்லையா?

தி.மு..மீது ஏன் பார்ப்பனர்களுக்கு அப்படி ஒரு வெறுப்பு?

தி.மு.. அணி தோற்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறார்கள்?

அதற்காக பல குயுக்தியான தந்திரங்களைச் செய்கிறார்கள்.

 உங்களுக்கென்ன அதற்குள் அவசரம்?

தி.மு.. கூட்டணி எப்படியாவது கலகலத்துப் போகாதா? அந்தக் கூட்டணியிலிருந்து யாராவது வெளியேறி வர மாட்டார்களா என்பதற்காக, நீங்கள் அந்தச் சின்னத்தில் தான் போட்டியிடவேண்டும் - அந்த சின்னம்  உங்களுக்கு சரியாக வருமா? என்றெல்லாம் கலகமூட்டுவதாக சின்னத் தனமாகக் கேட்கிறார்கள்.

சின்னத்தைப்பற்றியோ, இடங்கள் ஒதுக்கீடு பற்றியோ கவலைப்படவேண்டியவர்கள் கூட்டணித் தலைவரும், கூட்டணியில் உள்ளவர்களும்தான். உங்களுக்கென்ன அதற்குள் அவசரம்?

இவற்றையெல்லாம் வைத்து நீங்கள் கலகமூட்டினால்,  இந்தக் கூட்டணி கலகலத்துவிடும் என்று நினைக்கிறீர் களா? இந்தக் கூட்டணி ஒருபோதும் கலகலக்காது; நீங்கள் நினைப்பதுபோன்று  கலகலத்துப் போவதற்கு, இது மணல் வீடல்ல இது  -நீங்கள் முட்டினால் உங்கள் மண்டை உடைந்து  போகும் அளவிற்கு, இது மலைக்கோட்டை போன்ற கூட்டணியாகும். நூறாண்டு கால சரித்திரம் பின்னணியில் இருக்கிறது. அதனுடைய அஸ்திவாரம் என்பது பலமானது. நேற்று பெய்த மழையில், இன்றைக்கு முளைத்த காளான் கட்சிகளைப் போல அல்லது முளைக்க எண்ணி, முளைக்காமலே போனவர்களைப் போல வெளியாகாத படம் அல்ல என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஆகவே, நண்பர்களே!  மிக முக்கியமாக இதில் சிந்திக்கவேண்டிய விஷயம் என்ன? திராவிட முன் னேற்றக் கழகத்தை எப்படியாவது வீழ்த்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆளுங்கட்சி கூட்டணியில் இப்பொழுது யார் இருக்கிறார்கள்? 

உருவத்தால் பலராய் காண்பர் -

உள்ளத்தால் ஒருவரே!

தி.மு.. கூட்டணி கொள்கை ரீதியாக உள்ள கூட்டணி - பத்து கட்சிகள் உள்ள கூட்டணியில், இன்னும் பல கட்சிகள் சேரக்கூடிய நிலை இருக்கிறது! எங்களுக்கு இடங்கள் முக்கியமல்ல - லட்சியம்தான் முக்கியம் என்று சொல்லக்கூடியவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

ஒன்றுபட்ட உருவம்  -ஓர் உருவம்

உருவத்தால் பலராய் காண்பர் - உள்ளத்தால் ஒருவரே!

கொள்கையால் ஒருவரே  -  கட்சியால் பலராய் காண்பர்.

இப்படிப்பட்ட ஒரு அற்புதமான சூழல் இங்கே!

அங்கே என்ன நிலைமை?

இன்னும் அந்தக் கூட்டணியில் யார் இருக்கிறார்கள்? யார் இல்லை? என்று முடிவு செய்ய முடியாத ஒரு நிலை.

இன்னுங்கேட்டால், முதல்வர் வேட்பாளராக, இன் றைய முதலமைச்சரை ஏற்றுக்கொள்வது என்பதே மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அவர்களுக்குள்ளே பிரச்சினை, மிகப்பெரிய அளவிற்கு.

‘‘லேடியா? மோடியா?'' என்று ஜெயலலிதா அம்மையார் கேட்டாரா, இல்லையா?

நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று வடக்கே இருந்து சொல்கிறார்கள். என்ன தைரியம் அவர்களுக்கு? எப்படி வந்தது? அந்த அம்மையார் இருந்திருந்தால், இப்படி அவர்கள் பேசுவார்களா? ‘‘லேடியா? மோடியா?'' என்று அந்த அம்மையார் கேட்டாரா, இல்லையா? அது கூட உங்களுக்கு மறந்துவிட்டதா?

இப்பொழுது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, கிடந்தவர்கள் - அவர்கள் சொல்கிறார்கள், நீங்கள் முடிவு செய்தால் போதாது - நாங்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார்கள்.

அவர்களுக்கு எப்பொழுது முடிவு செய்யும் உரிமை வரும்? அவர்கள் பெரும்பான்மையாக இருந்து - அவர் கள் தலைமை வகிக்கும் நிலை இருந்து - அவர்களாகப் பார்த்து உங்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யும் நிலையில் அவர்கள் இருந்தால், அதைச் சொல்லுவதில், தர்க்க ரீதியாக, லாஜிக்கலாக ஒரு காரணம் உண்டு. ஆனால், அப்படி உண்டா?

அதைத் திருப்பி அழுத்தம் திருத்தமாகக் கேட்கக்கூடிய துணிவு உங்களுக்கு இல்லையே! ஏன்? ஏன்?

உங்கள் கட்சியைப் பிரிக்கலாம் பிளவுபடுதல் என்பது தானே காவி மத்திய ஆளுடைய திட்டம் - மறுக்க முடியுமா?

திராவிட  முன்னேற்றக் கழகத்திற்கு  அவர்களால் கொஞ்சம் தொல்லை கொடுக்க முடியும் - அதனால், தி.மு..வின் வெற்றியைத் தடுக்கலாம் என்று நினைத்தால், அவர்களால் அது முடியாது. ஒருபோதும் நடக்காது!

முதலில், ஆளுங்கட்சிக் கூட்டணியை (அதிமுகவை) காலி செய்யவேண்டும். அதற்காக, நாம் புதிதாக சிலரை "தயாரிக்கவேண்டும்". அதில், சினிமா கவர்ச்சி என்பது தமிழ்நாட்டில் இருக்கின்ற போதைகளிலேயே தலையாய போதை அது. அதைப் பயன்படுத்த எண்ணினார்கள்.

ஆனால், மக்களுக்குத் தெளிவாகத் தெரியும் - சினிமா பார்ப்பது வேறு - அதேநேரத்தில், சினிமாதான் வாழ்க்கை அல்ல என்பதை நன்றாகப் புரிந்திருக்கிறார்கள்.

எனவேதான், ஒப்பனை வேறு - உண்மை வேறு என்பதை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். கார ணம் இது பகுத்தறிவு பூமி.

பா... நம்பியிருந்தவர் - கைவிட்டுவிட்டார்!

நாங்கள்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என்ற பா...வினர் - யாரை நெருங்கினார்களோ, அவர் கைவிட்டுவிட்டார். ‘அம்போ' வென்று!

நாடாளுமன்றத் தேர்தலில், என்னுடைய பிரச்சார மேடைகளில், ‘இந்து' பத்திரிகையில் வந்த செய்தியை எடுத்துக் காட்டினேன். அப்பொழுது அமித்ஷா பா... தலைவராக இருந்தார். அவர் இங்கே வந்து, நாங்கள்தான் கூட்டணிக்குத் தலைமை வகிப்போம் என்று சொன்னார்.

எப்படி நீங்கள் தலைமை வகிப்பீர்கள். அய்ந்து இடங்களை உங்களுக்காக அவர்கள் ஒதுக்கினார்கள் - பிறகு எப்படி கூட்டணிக்கு நீங்கள் தலைமை வகிப்பீர்கள்?

இப்பொழுதுகூட, சட்டமன்றத் தேர்தலில் 40 இடமா? 30 இடமா? என்று கேட்கக்கூடிய இடத்தில் நீங்கள் இருக் கிறீர்கள்; அவர்கள் அங்கே கொடுக்கின்ற இடத்தில் இருக் கிறார்கள். இதனை அழுத்தந்திருத்தமாகச் சொல்லுவதற் குக்கூட அதிமுகவுக்கு நெஞ்சில் திராணியில்லையே! மகா வெட்கம்!

ஆனால், எவ்வளவு பெரிய போராட்டங்களையும் எதிர்த்து, மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெறக்கூடிய அளவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை யில் இருக்கின்ற அணி வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.

நம் நாட்டில் உள்ள பார்ப்பனர்களுக்கு தி.மு..மீது அவ்வளவு கோபம் - தி.மு.. அவர்களுக்கு விரோதமாக எதுவும் செய்யவில்லை.

கொள்கையைச் சொல்லி ஓட்டு கேட்கிறார்

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின்

திராவிடர் கழகமாவது பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கிறது. ஆனால், தி.மு.. ஒரு அரசியல் கட்சி - அரசியல் கட்சிக்கு எந்த எல்லையோ அந்த எல்லையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால்,  கொள்கைபூர்வமாக இருக்கக் கூடிய அளவிற்கு அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதில் ஒளிவுமறைவு இல்லாமல் இருக்கிறார்கள். கொள்கையோடு இருக்கிறார் கள் என்பதற்கு உதாரணம், ஒவ்வொரு மாவட்டத்திலும் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை காணொலிமூலம் நடத்துகிற திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள், தெளிவாகக் கொள்கையைச் சொல்லி ஓட்டு கேட்கிறார்.

நாங்கள் ஏன் பதவிக்கு வரவேண்டும் என்று சொல்லும் பொழுது, ஒளிவு, மறைவின்றி சொல்கிறார். இதோ அவர்கள் வெளியிட்டு இருக்கின்ற உரைகள் - புத்தகங்கள்.

"இது பெரியார் மண்" என்று தெளிவாகச் சொல்கிறார். தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார்கள். பெரியார் மண்ணை, காவி மண்ணாக ஆக்கலாம் என்று கணக்குப் போடாதீர்கள். உங்கள் கணக்கு நிறைவேறாது - நிறைவேற்ற விடமாட்டோம்.

ஆரியத்திற்கு, தி.மு..மீது எதிர்ப்பு!

அதுபோல, நாங்கள் "திராவிடத்தின் வாரிசுகள்தான்" - கொள்கையைச் சொல்லி ஓட்டு கேட்கிறார்! அதற்காக அவர் அஞ்சவில்லை. அதனால்தான், ஆரியத்திற்கு, தி.மு.. மீது எதிர்ப்பு. அதனால்தான், பார்ப்பனர்கள் தி.மு.. ஆட்சிக்கு வராமல் தடுக்கவேண்டும் என்று நினைக் கிறார்கள். இப்பொழுது உள்ள சூழலே இருந்தால், சமஸ் கிருதம் ஆட்சி புரியும் - மனுதர்மம் மகுடம் சூட்டிக் கொள்ளும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

சம்மன் இல்லாமல் எல்லாவற்றிலும்

ஆஜராகக் கூடிய புரோக்கர் ஒருவர்!

நேரிடையாக அது முடியாது என்றவுடன், இங்கே இருக்கின்ற சில அரசியல் புரோக்கர்கள் - முதலில் ஒருவர் இருந்தார், இப்பொழுது  அவருக்குப் பதிலாக வேறொருவர் வந்திருக்கிறார்! அவர் சம்மன் இல்லாமல் எல்லாவற்றிலும் ஆஜராகக் கூடியவர்.

அவர், ஒரு நடிகரைப்  பிடித்தார். நடிப்புத் துறையில் அவருக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது. அதில் நமக்கு எந்தவிதமான மாறுபாடும் இல்லை. சிறந்த நடிகர் - கலைத் துறையில் அவர் பணியாற்றக் கூடியவர். அவருடைய நடிப்பு, ஆற்றல்  அதற்காக அவரை நாம் பாராட்டலாம். அதனாலேயே அவர் எல்லாவற்றிற்கும் தகுதியானவர் என்ற முடிவிற்கு எந்தப் பகுத்தறிவுவாதியும் வர முடியாது. சாதாரண அறிவு படைத்த மனிதன்கூட அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

அவரைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களின் சினிமா மோகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ‘‘ஆகா, இதோ அவர் வந்துவிட்டார், இதோ வந்துவிட்டார்'' என்று ஒரே நாளில், தொலைக்காட்சி ஊடகங்களில், தலைவர் ரஜினி இதோ வருகிறார், அதோ வருகிறார் என்று பார்ப்பனர்கள் போட்ட கும்மாளம் இருக்கிறதே,  சொல்ல முடியும். அது கேலிக்கூத்துதான். எப்போதுமே அவர்களுக்குப் பின்புத்தி தான் என்று பெரியார் சொல்லுவார்.

தினமலர்' வெளியிட்ட செய்தி!

தினமலர்' என்ற ஒரு பார்ப்பன நாளேட்டில், ‘‘தலைமை நீதிபதி முதல் அய்..எஸ்.கள் வரை சக்ர வியூகம்'' என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடுகிறது.

தலைமை நீதிபதி, அய்..எஸ்., சக்ர வியூகம்!

‘‘புத்தாண்டில், அரசியல் அவதாரம் எடுக்கும் ரஜினி, முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் இந்நாள் அய்..எஸ்., அதிகாரிகள் துணையுடன் களமிறங்கவும், முதல் போட்டியிலேயே அதிரடி வெற்றி பெறவும், சக்ர வியூகம் வகுத்து வருகிறார். அதற்கு ஆதரவாக, கவர்ச்சி நடிகையர், இளம் நடிகர்கள் என, பலரும் வரிசை கட்டி நிற்பதால், 'ரணகள' துவக்கத்திற்கு, அவர் தயாராகிறார்.

'தமிழகத்தில் அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்; இப்போது இல்லையென்றால், எப்போதும் இல்லை' என்ற, 'பஞ்ச்' வசனத்தோடு, நடிகர் ரஜினி, அரசியல் களத்தில் கால் பதித்துள்ளார். அடுத்த மாதம், புதிதாக கட்சி துவங்கப் போவதாக அறிவித்து, அதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில், அரசியல் அதிசயத்தை நிகழ்த்த முடிவு செய்துள்ள ரஜினி, நேற்று தன், 71ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமி., துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.., தலைவர் ஸ்டாலின் என, அனைத்து தரப்பினரும், வாழ்த்து தெரிவித்தனர்.நடிகர், நடிகையர், இசை அமைப் பாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் என, திரையுலகப் பிரமுகர்கள் ஏராளமானோர், அவருக்கு சமூக வலைதளங் களில், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். மாநிலம் முழு தும் உள்ள ரசிகர்கள், அவரது பிறந்த நாளை, பல விதமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அரசியலுக்கு ஆயத்தமாகி வரும் ரஜினிக்கு, இது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளதாக தெரிகிறது.

அறிவிப்பு வெளியிட, 18 நாட்களே உள்ளதால், கட்சி கட்டமைப்பு, கொள்கை, கொடி வடிவமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. வரும் புத்தாண்டில், தன் கட்சி கொள்கைகள் மற்றும் திட்டங்களை, மக்கள் மத்தியில், ரஜினி அறிவிக்க உள்ளார்.

இதற்கு, பல்வேறு பிரதமர்கள் மற்றும்  மாநில முதல் வர்களிடம் பணிபுரிந்த, மூத்த அய்..எஸ்., அதிகாரிகள் உதவி வருகின்றனர். அத்துடன், மற்ற கட்சிகளை வீழ்த்தி, களத்தில் வெற்றி பெறுவதற்கான, 'சக்ர வியூகம்' அமைக் கும் பணியிலும், ரஜினிக்கு கை கொடுக்கும் அரசியல் ஆசான்களும், அதிகார வர்க்கத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

* மிக முக்கியமாக, டில்லியில் உள்ள, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஒருவர், கட்சியின் கொள்கை திட்டங் களை வகுப்பதில், பல்வேறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

* தேர்தல் ஆணையத்தில் பணியாற்றிய மிக முக்கிய செயலர் ஒருவரும், கட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என, ரஜினிக்கு வழிகாட்டி உள்ளார்.

* தமிழகத்தில் பொதுப்பணி, நீர்வள ஆதாரம், வருவாய், வணிக வரி, நிதி, உள்துறை போன்றவற்றில் பணியாற்றி, ஓய்வுபெற்ற அதிகாரிகள், தமிழகத்தின் தேவைகளை பட்டியலிட்டு, ரஜினியிடம் வழங்கி உள்ளனர்.

* ரஜினி கட்சி துவக்கப் போவதாக அறிவித்ததும், அவர் பின்னால் அணிவகுக்க, கவர்ச்சி நடிகையர், இளம் நடிகர்கள், வில்லன் நடிகர்கள், குணசித்திர நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் என, ஏராளமானோர் தயாராகி வருகின்றனர்.அவர்களில் யாரை எல்லாம் கட்சியில் சேர்ப்பது; யாருக்கு என்ன பதவி வழங்குவது என்றும், ஆலோசனை நடந்து வருகிறது. அரசியல் பிரபலங்கள் ஏராளமானோர், ரஜினிக்கு ஆதரவாக களம் இறங்க உள்ள தகவல், மற்ற கட்சிகளின் வட்டாரத்தில், சூட்டை கிளப்பி உள்ளது.

* கட்சியின் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கீழ், அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரசாரம் செய்யும் யுக்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது.

* கட்சி துவக்கிய பின், பிப்ரவரி மாதம், முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர், 50 லட்சம் பேருடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்கவும் திட்ட மிட்டுள்ளார்.

* கட்சியில் யாருக்கும், எந்த மனத் தாங்கலும் இருக்கக் கூடாது என்பதிலும், ரஜினி உறுதியாக உள்ளார். ஆட்சி என வந்துவிட்டால், கட்சியில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களை, அரசு அதிகாரிகளை, அரசு இயந்திரத்தை, தொழிலதிபர்களை, திரைப்படத் துறையினரை வாட்டி வதைக்கக் கூடாது என்று, கடும் உத்தரவு போட்டுள்ளார்.

* ரஜினிக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ள, தகவல் தொழில்நுட்பத்தை சிறப் பாக பயன்படுத்தவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதுவரை, மற்ற கட்சிகள் அறிவிக்காத திட்டங்கள், கொள்கைகளுடனும்; நட்சத்திர கூட்டம், ரசிகர் பட்டாளத்துடனும், ரணகள துவக்கத்திற்கு, ரஜினி தயாராகி வருகிறார்.''

- தொடரும்

Comments