கருநாடக - தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் வெறியாட்டம்

 


தாளவாடி, ஜன.20- தமிழக-கருநாடக  எல்லையில் உள்ள தாளவாடியில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் வெறியாட்டம் போட்டுள்ளனர்.

கருநாடக எல்லையில் அமைந் துள்ள தமிழகத்தின் ஈரோடு மாவட் டத்திலுள்ள தாளவாடி கிராம மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள் ளது. அப்பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தமிழ் பெயர் பலகைகளை உடைத்து வெறியாட் டம் போட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

இந்த கிராமத்தை கருநாடகா வுடன் இணைக்கக்கோரி கடந்த 10ஆம் தேதி கன்னட சலுவளி கட்சி யின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் இரு மாநில எல்லையிலுள்ள தாள வாடியை கருநாடகாவுடன் இணைக் கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் ஊர்வலமாக வந்த கன்னட அமைப்பினர் தேசிய நெடுஞ்சாலையில் ராமபுரம் என்ற இடத்தில் தமிழக அரசின் சார்பில் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டி ருந்த தமிழ் வரவேற்பு பலகையை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு நடப்பட்டிருந்த தமிழ் பெயர் பலகைகளை அகற்றி, தமிழ் எழுத் துக்களை அழித்தனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழ்அமைப்பினரும் அங்கு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இத னால் ராமபுரம், தாளவாடி உள் ளிட்ட எல்லையோர கிராமங்களில் பதற்றமான சூழல் உருவானது.

இதனிடையே தமிழ் பெயர் பலகைகளை அகற்றி தமிழக அர சின் பொது சொத்துக்களை சேதப் படுத்தியதாக வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் 20 பேர் மீது தாளவாடி காவல்துறையினர்  நேற்று (19.1.2021) வழக்கு பதிவு செய்தனர். மேலும் இவ் வழக்கை கருநாடக மாநில எல் லைக்குட்பட்ட சாம்ராஜ்நகர் மாவட்டகாவல்துறையினருக்கு மாற்ற முடிவெடுத்துள்ளனர்.

Comments