ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     வேளாண் சட்டங்களில் எந்த குறைபாடும் இல்லை என்ற மன நிலையில் மோடி அரசு விவசாய அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதால் எந்த பயனும் இல்லை என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

·     உலக நாடுகள் மத்தியில் இந்தியா ஒரு பன்முக, பல கலாச்சாரங்கள் உள்ள மதசார்பற்ற ஜனநாயக நாடு என்பதை பிரதமர் மோடி வலுவிழக்கச் செய்துவிட்டார். தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனுடன் நல்லுறவு பேண முயல வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர், பொருளாதாரப் பேராசிரியர் சஞ்சய் பாரு குறிப்பிட்டு உள்ளார்.

·     ஜனவரி 26 டில்லியில் அரசின் பேரணி நடைபெற்றதற்குப் பிறகு விவசாய அமைப்புகள் டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளன.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     அனைத்து மொழிகளையும் கலாச்சாரத்தையும் நாம் காக்க வேண்டும். பாஜக இதனை அழிக்க முயல்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

·     அரசமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு விளக்கம் அளித்திடும் உரிமை நீதிமன்றங்களுக்கு உண்டு. இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றங்களுக்கு உள்ளது என மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     ரிபப்ளிக் டிவியின் டி.ஆர்.பி. மதிப்பீட்டை அதிகரிப்பதற்காக, தனக்கு அர்னாப் கோஸ்வாமி 12000 அமெரிக்க டாலரும் ரூ 40 லட்சமும் தந்ததாக பார்க் அமைப்பின் செயல் இயக்கு நர் பர்தா தாஸ்குப்தா காவல்துறைக்கு எழுத்துப் பூர்வமாக  கூறியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·             உத்தர்காண்ட் மாநிலத்தில் மால்புரி கிராம மக்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக உள்ள பாஜகவினர் மற்றும் அமைப்புகள் தங்கள் கிராமத்திற்குள் வர தடை விதித்துள்ளனர்.

·             நீதிபதிகள் நியமனத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இடம் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய சட்ட அமைச்சர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார்.

·             பீமா கொரேகான் வழக்கில் 2018இல் கைது செய்யப்பட் டோரை உடனடியாக விடுதலை செய்ய அய்க்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

உச்ச நீதிமன்ற அமர்வு ஒன்றினை தென்னிந்தியாவில் அமைத்திட வேண்டும் என தமிழ் நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாட காவின் அய்ந்து வழக்குரைஞர் அமைப்புகளும் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

- குடந்தை கருணா

25.1.2021

Comments