புதுச்சேரி திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

புதுச்சேரி, ஜன. 11- புதுச்சேரி மண்டல திராவிட கழக கலந்துரையாடல் கூட் டம் இராஜா நகர், பெரியார் படிப்ப கத்தில் 21.12.2020 அன்று மாலை 6 மணி அளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநில திராவிட கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமை தாங் கினார். புதுச்சேரி மண்டல செயலாளர் கி.அறிவழகன் வரவேற்புரையாற்றினார். வில்லியனூர் கொம்யூன் கழகத் தலைவர் கரு.சி.திராவிடச்செல்வம் கடவுள் மறுப்பு வாசகத்தை முழங்கினார்.

புதுச்சேரி மண்டல தலைவர் அறிமுகம், தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள், மயக்க பிஸ்கெட்டுகள் புத்தக அறிமுகம் மற்றும் பரப்புதல், தெருமுனை பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரங்கள் எனும் பொருளில் நடை பெற்ற கலந்துரையாடலில் புதுச்சேரி உள்ளிட்ட தமிழகம் பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஆடிட்டர் குஇரஞ்சித்குமார், புதுச்சேரி மண்டல பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கைலாச நெ.நடராசன், புதுச்சேரி மண்டல கழக அமைப்பாளர் இர.இராசு, கே.குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் லோ.பழனி, விலாசினி இராசு, கவிஞர் கழக த்தின் புதிய வரவு வி.இளவரசி சங்கர், மண்டல மகளிரணித் தலைவர் எழிலரசி, அறிவழகன், கவிஞர் யேசுராஜா () யாழ்தமிழன், அரியாங்குப்பம் கொம்யூன் கழகத் தலைவர் இரா.ஆதிநாராயணன், கழக முன்னணி தோழர் பெ.ஆதிநாரா யணன், புதுச்சேரி நகராட்சி கழகத் தலைவர் மு.ஆறுமுகம், செயலாளர் . ண்ணன், புதுச்சேரி மண்டன துணைத் தலைவர் வீர.இளங்கோவன், புதுச்சேரி பகுத்தறிவாளன் கழக மேனாள் செயலாளர் கோ.மு.தமிழ்ச்செல்வன், புதுச்சேரி திராவிடர் கழக மேனாள் செயலாளர் வே.அன்பரசன், பெரியார் பெருந்தொண்டர் இருசாம்பாளையம் செ.இளங்கோவன், சேதராப்பட்டு .சிவக்குமார், புதுச்சேரி மண்டல மாண வர் கழக தலைவர் சு.மணிபாரதி, வில் லியனூர் நகர கிளைக்கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் கு.உலக நாதன், வில்லியனூர் சம்சா சுந்தர், மூலைக்குளம் சாம்பசிவம், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் .சிவ ராசன், துணை அமைப்பாளர் கா.நா.முத்துவேல், இளைஞர் அணி துணைத் தலைவர் கே.இராமன், புதுச்சேரி அரசு தலைமைச் செயலக மேனாள் சார்பு செயலாளர் எஸ்.கிருஷ்ணசாமி,

பகுத்தறிவாளர் கழகம் இரா.வெற்றி வேல், .பாலமுருகன், முத்தியால் பேட்டை மு.குப்புசாமி, கலைமாமணி கவிஞர் வி.பி.மாணிக்கம், ஓய்வுபெற்ற கல்வித்துறை அலுவலரும் ஆசிரியரு மான பெரியார் பெருந்தொண்டர் கி..இராசன் ஆகியோர் கழக வளர்ச்சி பணிகள், தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ழ்ச்சியை சிறப்பாக செய்வது,

கழக வெளியீடான மயக்க பிஸ்கெட் துண்டறிக்கையை பரப்புவது குறித்தும் கருத்துகளை எடுத்துக் கூறினர்.

இறுதியாக கழக தலைவர் சிவ.வீரமணி புதியதாக நியமிக்கப்பட்ட பெரியார் பெருந்தொண்டர் இரா.சட கோபனை அறிமுகப்படுத்தி உரையாற் றினார்.

சடகோபன் இயக்கத்தில் பெரியார் காலந்தொட்டு தொழிற்சங்கத்தில் தொடங்கி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் பொறுப்பாளராக பயணித்தது வரையும் பல்வேறு கருத்துகளை சிறப் பாக எடுத்துக் கூறினார்.

மேலும் இயக்கத்தில் சிறப்பாக செயல்படுவேன் என உறுதியளித்தார்.

கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் இரா.சடகோபன், இர.இராசு இருவருக் கும் பயனாடைகள், புத்தகங்கள் தந்து சிறப்பு செய்தனர். கலந்துரையாடல் கூட்டத்தில் மாணவர் கழக தோழர்கள் .தமிழ்பிரியன், சூரிய பிரகாஷ், தோழர் களஞ்சியம், வெங்கடேசன், திராவிடன் புத்தக நிலையம் இரகுபதி, திருச்சி அர்ஜுனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை கழக இளைஞரணித் தலைவர் திராவிட இராசா தொகுத்து வழங்கினார்.

Comments